Raja Rani Serial | ராஜா ராணி 2 கதை இப்படி மாறுதா? செம்ம ட்விஸ்ட்... ட்ரெண்டாக்கும் ஆல்யா Fans..
தற்போது நான்கரை மாத கர்ப்பமாக இருக்கிறேன். ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது குழந்தை எல்லாம் நாங்கள் திட்டமிடவில்லை - ஆல்யா மானசா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களீல் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகமும் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் சித்து, ஆல்யா மானசா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்திலும் ஆல்யா மானசாவே நடித்திருந்தார். முதல் பாகத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆல்யா. இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தாள். குழந்தைக்கு அய்லா என பெயர் வைத்திருக்கின்றனர்.
குழந்தை பிறப்பிற்கு பின் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா – சஞ்சீவ் தங்களுக்கென தனியாக யூட்யூப் சேனலும் வைத்திருக்கின்றனர். அதில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்வது வழக்கம்.
இந்நிலையில், ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது குறித்து தங்களது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆல்யா கர்ப்பமாக இருப்பதாகவும் ரசிகர்களின் வாழ்த்தும், அன்பும் தங்களது இரண்டாவது குழந்தைக்கும் வேண்டுமெனவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் அந்த வீடியோவில் ஆல்யா பேசுகையில், “தற்போது நான்கரை மாத கர்ப்பமாக இருக்கிறேன். ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது குழந்தை எல்லாம் நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால், இந்த விஷயம் எங்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைஸாக இருந்தது.
இதைப்பற்றி ராஜா ராணி 2 குழுவிடம் சொல்லியிருந்தோம். அவர்கள் சேனல் நிர்வாகத்திடம் பேசிவிட்டு சீரியலில் இருந்து நீக்காமல் அதற்கேற்றாற்போல் கதையை மாற்றுவதாக உறுதியளித்திருக்கிறார்கள். இதை கேட்டபோது என்னுடைய கண்களில் கண்ணீர் வந்துவிட்டது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Maanaadu 50 Crore: ரூ. 50 கோடி வசூலில் சேரும் STR..! மாநாடு கலெக்ஷனில் மாஸ் காட்டும் சிம்பு..!
2nd Baby for Arulnithi: வீட்டுக்கு வந்த தேவதை.. அருள்நிதி சொன்ன ஸ்வீட் நியூஸ்!