Maanaadu: ரூ. 50 கோடி வசூலில் சேரும் STR..! மாநாடு கலெக்ஷனில் மாஸ் காட்டும் சிம்பு..!
Maanaadu Box Office Collection: இதுவரை சிம்பு நடித்த படங்களில் வல்லவன் படமும் (30 கோடி ரூபாய்), ஒஸ்தி படமும்தான் (36 கோடி ரூபாய்) வசூலில் 30 கோடி ரூபாயை கடந்துள்ளது
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் மாநாடு ஏகப்பட்ட தடங்கல்களுக்கு பிறகு கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மாநாடு படத்துக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதையும், காட்சியமைக்கப்பட்ட விதமும் அருமையாக இருக்கிறதென ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறதெனவும், சிம்புவுக்கு இந்தப் படம் பக்கா கம்பேக் எனவும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்த சூழலில், மாநாடு படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ஏழு கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், மற்ற இடங்களில் மூன்று கோடி ரூபாயும் என மொத்தம் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மாநாடு படத்தின் இந்த மாபெரும் வெற்றியை படக்குழு கொண்டாடிவருகிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுடன் கேக் வெட்டி இந்த வெற்றியை கொண்டாடினர். மேலும் இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து கால்ஷீட் கேட்டு சிம்பு வீட்டுக்குள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் படையெடுக்க தொடங்கிவிட்டனர் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
Going by the current trend, it looks like #Maanaadu will be the first 50cr grosser for @SilambarasanTR_ as a solo hero in #TamilNadu. 30cr+ already, if the same momentum continues on the weekdays, 50cr is achievable! pic.twitter.com/l3CALOLptq
— Rajasekar (@sekartweets) November 29, 2021
இந்நிலையில் படம் வெளியாகி 4 நாள்களில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் மாநாடு வசூலித்துள்ளது. மேலும் இதே வேகம் தொடர்ந்தால் மாநாடு படம் விரைவில் 50 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி 50 கோடி ரூபாயை மாநாடு வசூலிக்கும்பட்சத்தில் சிம்பு நடித்த படங்களிலேயே மாநாடுதான் 50 கோடி ரூபாய் வசூலை தொட்ட முதல் படம் என்ற பெயரை பெறும்.
இதுவரை சிம்பு நடித்த படங்களில் வல்லவன் படமும் (30 கோடி ரூபாய்), ஒஸ்தி படமும்தான் (36 கோடி ரூபாய்) வசூலில் 30 கோடி ரூபாயை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்