பஞ்சாயத்து முடிஞ்சுது! மீண்டும் கட்டப்பா! 35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இணையும் சத்யராஜ்..!
சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் பேசப்படுகிறது. பாகுபலியின் கட்டப்பா மீண்டும் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடங்கி பாதியில் நின்று போன இந்தியன் 2 சூட்டிங் வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்க உள்ளது. அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஏற்கனவே படத்தின் சூட்டிங் இருக்கான வேலைபாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.பிரபல தமிழ் நடிகரான சத்யராஜ் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கப்போவதாக தற்போது செய்தி பரவி வருகிறது.
சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் பேசப்படுகிறது. பாகுபலியின் கட்டப்பா மீண்டும் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் சத்யராஜ் உலகநாயகனுடன் 35 வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் இணைய போகிறார். நவரச நாயகன் கார்த்திக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கப்போவதாக முன்னதாக செய்தி பரவி வந்த நிலையில், தற்போது சத்யராஜ் நடிக்க உள்ளார் என்ற செய்தியும் பரவி வருகிறது. இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகி இருந்த கலைமாமணி விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் காலமான நிலையில், அவர்களது கதாபாத்திரங்களுக்கு சத்யராஜ் மற்றும் கார்த்திக் வருவார்கள் எழுந்துள்ளது.
இந்தியன் 2 :
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பூஜையும் போடப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிற இந்தப்படத்தில் நடிகையாக காஜல் அகர்வாலும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இசையமைப்பாளராக அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகள் :
படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் , கிரேன் நிலை தடுமாறி கீழே விழுந்து உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிது காலம் படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்க சென்று விட்டார். படத்தில் நடித்த காஜல் அகர்வாலுக்கும் திருமணமாகியது. இதனால் அவர் படத்தில் இருந்து விலகியதாகவும் சொல்லப்பட்டது. அதன் பிறகு கொரோனா ஊரடங்கும் தொற்றிக்கொண்டது. இதனிடையே லைகா நிறுவனம் ஷங்கர் தரப்பு படத்தை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தப் பிரச்னையை விசாரித்த நீதிமன்றம் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியது. ஆனால் இருதரப்பிற்கும் இடையேயான பிரச்னை தீரவில்லை. இதனிடையே பிரச்னையில் உதயநிதி தலையிட்டு, இந்தியன் 2 வேலைகளை தொடங்க ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. இதனிடையே படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், மீண்டும் படத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயான பின் சிறிது இடைவெளிக்கு பிறகு இந்த செப்டம்பரில் அவரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார்.