மேலும் அறிய

Divya Sathyaraj: பணத்துக்காக இப்படி செய்யாதீங்க: தனியார் மருத்துவமனைகளை கிழித்த திவ்யா சத்யராஜ்!

"நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரம் கிடையாது. தனியார் மருத்துவமனைகள் வச்சு இருக்கவங்க பேஷண்டுகள மனிதாபமானத்தோட நடத்தணும்னு நான் கேட்டுக்கறேன்” - திவ்யா சத்யராஜ்

தமிழ்நாட்டின் பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் 'மகிழ்மதி இயக்கம்' என்ற பெயரில் அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கி கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நடத்தி  கவனமீர்த்து வருகிறார். 

மகிழ்மதி என்கிற தனது இயக்கத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மாநிலம் தாண்டி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் தனது அழுத்தமான அரசியல் கருத்துகளையும் தயங்காமல் இணையத்தில் முன்வைத்து வரும் திவ்யா,  தனக்கு அரசியல் கட்சி ஒன்றில் இணைய அழைப்பு வந்ததாகவும், ஆனால் எந்த மதத்தைப் போற்றும் கட்சியும் இணைய தனக்கு விருப்பமில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியினை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியிருந்தார். திவ்யா பகிர்ந்து கொண்ட இந்தத் தகவல் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனமீர்த்தது.

இந்நிலையில், தற்போது தனியார் மருத்துவமனையில் நடைபெறும் அவலம் குறித்து திவ்யா சத்யராஜ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“நான் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். தனியார் மருத்துவமனைகளில் நடக்கற ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்ல தான் இந்த வீடியோ. இது என்னுடைய டாக்டர் நண்பர்கள் கிட்ட இருந்து வந்த தகவல் தான். சில தனியார் மருத்துவமனைகள்ல மருத்துவமனைக்கு லாபம் வரணும் அப்படிங்கறதுக்காக தேவையில்லாத ரத்த பரிசோதனை, ஸ்கேன், எம்.ஆர்.ஐ இதையெல்லாம் பேஷண்டுகளை செய்ய வைக்கறாங்க.

ஒரு பேஷண்ட் குணமானா கூட 2 நாள் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆக சொல்லி டிஸ்சார்ஜ் பண்றாங்க. தனியார் மருத்துவமனைக்கு போனா நோய் குணமாகும் அப்படிங்கற நம்பிக்கைய, விட பணம் காலியாகும் அப்படிங்கற கவலை தான் நோயாளிகளுக்கு அதிகமா இருக்கு.

எங்க அமைப்பு மூலமா சில பேஷண்டுகளுக்கு நாங்க உதவி செஞ்சாலும் எல்லாருக்கும் செய்யறது நடைமுறைல முடியாத ஒரு விஷயம். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரம் கிடையாது. தனியார் மருத்துவமனைகள் வச்சு இருக்கங்கவங்க பேஷண்டுகள மனிதாபமானத்தோட நடத்தணும்னு நான் கேட்டுக்கறேன்” என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனமீர்த்து வருகிறது.

மேலும் படிக்க: Manjummal Boys: குடிப்பொறுக்கிகளை கொண்டாடும் நம்மூர் அரைவேக்காடுகள்; மஞ்சும்மல் பாய்ஸை வறுத்தெடுத்த ஜெயமோகன்!

Kangana Ranaut: “எவ்வளவு காசு தந்தாலும் திருமணத்தில் நடனமாட மாட்டேன்” - பாலிவுட் நடிகர்களை அட்டாக் செய்த கங்கனா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget