Samantha | ‛என் திட்டங்கள் அனைத்துமே நொறுங்கிவிட்டது...’ - விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா!
"விவாகரத்து என்பது மிகவும் வேதனையான செயலாகும் அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் வேண்டும்"
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவும் , தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவரான நாகசைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். மிகவும் புரிதலோடும் நெருக்கமாகவும் பொதுவெளியில் அறியப்பட்ட ஜோடிகள் இந்த மாத தொடக்கத்தில் விவாகரத்து குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டனர். இது அவரது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதன் பிறகு சமந்தா மீதான தொடர் குற்றச்சாட்டுகளும் , அவர் மீதான விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகரிக்க தொடங்கியது. கருக்கலைப்பு, ஆண் நண்பர்களுடனான நட்பு , திரைப்படங்களில் அதீத கவர்ச்சி என அடுக்கடுக்காக வெளியான விமர்சனங்களுக்கு அவ்வபோது அதற்கு பதிலடி கொடுத்து வந்தார் சமந்தா.
View this post on Instagram
இந்த நிலையில் இது குறித்து Film Companion உடனான உரையாடலில் வெளிப்படையாக பேசியுள்ளார் சமந்தா. சமந்தா ரசிகர்கள் வெறுக்கத்தக்க வகையில் சமூக வலைத்தளங்களில் பேசுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் , அது குறித்து மனம் திறந்த சமந்தா “ பொதுவான அன்னுடைய கருத்துக்களும் செயல்களும் ரசிகர்களின் கருத்துக்கு ஏற்ப இல்லாவிட்டால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள்.தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகளை எப்படி அவர்களுக்கு உணர்த்த முடியும். அவர்கள் நிச்சயம் டிரால் செய்வார்கள் ,உங்களை கஷ்டப்படுத்துவார்கள்.ஆனால் இதே போல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்புதானே” என ரசிகர்களின் விரக்தியை புரிந்தவராய் பதிலளித்துள்ளார் சமந்தா.
View this post on Instagram
மேலும் ரசிகர்கள் தங்களின் விரக்தியை சற்று சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம் என தெரிவித்த சமந்தா, "விவாகரத்து என்பது மிகவும் வேதனையான செயலாகும் அதிலிருந்து மீண்டு வர . எனக்கு நேரம் வேண்டும் , அது ஒரு ஒருபுறம் இருக்கட்டும் தனிப்பட்ட முறையில் என் மீதான இந்தத் தாக்குதல் இடைவிடாதது இருக்கிறது. இருப்பினும் இது போன்ற எதையும் என்னை உடைத்துவிட முடியாது என்றார். 2022 பிறக்க போகிறது உங்களின் புத்தாண்டு திட்டம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த சமந்தா “இந்த ஆண்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அனைத்தும் எந்த திட்டமும் இல்லாமல்தான் நடந்தது. கவனமாக தீட்டப்பட்ட திட்டங்கள் அனைத்துமே நொறுங்கிவிட்டது. அதனால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்காலம் எனக்கு என்ன கொடுக்க காத்திருக்கிறதோ அதனை சிறப்பாக செய்ய நான் காத்திருக்கிறேன் “ என முடித்தார். சமந்தாவின் பேச்சு மிகவும் கவனத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.