மேலும் அறிய

SAC on Vijay: ‘ஒரு பிள்ளை இருந்தா பிரச்னை வரத்தான் செய்யும்’ - எடப்பாடி முன்னிலையில் விஜயை சாடிய எஸ்.ஏ.சி.. அதிர்ந்த அரங்கம்!

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில் ஒரு குடும்பம், ஒரு பிள்ளை மனைவி இருந்தால் சிரமம் தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி முன்னிலையில் பேசியது வைரலாகிறது

தமிழ் சினிமாவில் தளபதி என திரை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விஜய். இவருக்கும் இவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது கூட இல்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் மேடையில் விஜய் பற்றி பேசிய ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

SAC on Vijay:  ‘ஒரு பிள்ளை இருந்தா பிரச்னை வரத்தான் செய்யும்’ - எடப்பாடி முன்னிலையில் விஜயை சாடிய எஸ்.ஏ.சி..  அதிர்ந்த அரங்கம்!

எடப்பாடி முன்னர் எஸ்.ஏ.சி பேசியது :

நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் ஒரு தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய எஸ். ஏ சந்திரசேகர், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியின் நிர்வாகம் குறித்து பேசினார். பிறகு "ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை மனைவி இருந்தால் பிரச்னைகள் வரத்தான் செய்யும்.

SAC on Vijay:  ‘ஒரு பிள்ளை இருந்தா பிரச்னை வரத்தான் செய்யும்’ - எடப்பாடி முன்னிலையில் விஜயை சாடிய எஸ்.ஏ.சி..  அதிர்ந்த அரங்கம்!

அதை சமாளிப்பது மிகவும் சிரமம்" என பேசியதற்கு பலரும் கைதட்டி சிரித்துள்ளனர். எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜயுடன் இருக்கும் கருத்து மோதலை பற்றி தான் பேசினார் என பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி  சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து விஜய் :

தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் விஜய் ஒரு நடிகராக முதலில் அறிமுகமானது அவரது தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் படத்தில் தான். இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு அதிகமான வசூலை ஈட்டும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். 

கட்சியால் வந்த பிரிவு :

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இது தந்தை - மகன் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட முக்கியமான காரணம். தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்ததாகவும் அது பிடிக்காத மகன் விஜய் தந்தைக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்ப பிரச்சனை வலுவடைந்து, தற்போது இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

பிறந்தநாளுக்கு கூட வராத மகன் :

சமீபத்தில் தான் எஸ்.ஏ.சி.தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினர். அந்த விழாவிற்கு கூட நடிகர் விஜய் வராததால் பல விமர்சனங்கள் அவரை நோக்கி மிகவும் கடுமையாக முன்வைக்கப்பட்டன. எஸ்.ஏ.சி மற்றும் அவரது மனைவி ஷோபா இருவர் மட்டும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிரப்பட்டன. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பினும், பெற்றோரை பிறந்தநாள் அன்று கூட வந்து சந்திக்காதது மிகவும் தவறு என பலரும் கருத்துக்களை பகிர்ந்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget