மேலும் அறிய

ஷட்டரை பூட்டி.. கெத்து காட்டி... தட்டித் தூக்கிய மாதவன்... 20 ஆண்டுகளுக்கு முன் ‛ரன்’ பெற்ற வின்!

Run movie: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 2002 ம் ஆண்டு, இதே நாளில் வெளியான ரன் திரைப்படம், ட்ரெய்லரில் ஏற்படுத்திய தாக்கம், தியேட்டர் வாசலில் பலரும் குவிந்து கிடக்க காரணமானது.

ஸ்ரீ ரங்கத்திலிருந்து புறப்பட்டு, வேண்டா வெறுப்பாக வேலை தேடி, சென்னையில் உள்ள அக்கா வீட்டிற்கு வரும் ஒரு இளைஞன். ஏதாட்சையாக பஸ்ஸில் பார்க்கும் இளம்பெண் மீது காதல். அவளை பின் தொடர, அவளும் முன் நகர, காதலோடு, காவலும் சேர்கிறது. இளம் பெண்ணை நெருங்க நினைப்பவர்களை, அந்த பெண்ணை மறைமுகமாக காவல் காத்து வரும் ஒரு கும்பல் தாக்குகிறது. 

இப்போது, ஸ்ரீரங்கம் இளைஞனுக்கும் அந்த கும்பலால் பிரச்சனை, அதுவரை அமைதியாக காதல் பேசிக் கொண்டிருந்த இளைஞன், இப்போது வேறு முகம் காட்டுகிறான். தன்னை விரட்டி வரும் ரவுடி கும்பலிடமிருந்து தப்பித்து ஓடும் அவன், தன் முன்னால் இருக்கம் ஷட்டரை அடைத்து, அந்த ரவுடிகளை பிய்த்து மேயும் போது தான், அவன் ரொமான்ஸ் ஹீரோ மட்டுமல்ல, ஆக்ஷன் ஹீரோ என்பதும் தெரிகிறது. 

View this post on Instagram
 
A post shared by 😍Status songs❤🤗 (@_tamil__song___lover)

அதுவரை தன் பின்னால் வருபவர்களை அடி மட்டுமே வாங்கிப் பார்த்த அந்த இளம் பெண், முதன்முறையாக தன் அண்ணன் அனுப்பிய ஆட்களை அடித்து துவம்சம் செய்த அந்த இளைஞனை விரும்புகிறாள். தன் தங்கையை தொட்டு, தன் ஆட்களையும் தொட்டுப் பார்த்த இளைஞனை விட்டு வைத்தானா அண்ணன்? அடிதடியே முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கும் அண்ணனை சமாளித்து, அவன் தங்கையை கரம் பிடித்தானா இளைஞன்? இது தான் ரன் படத்தின் கதை. 

ஆனந்தம் படத்தை எடுத்த பின், லிங்குசாமி எடுத்த இரண்டாவது படம். இரண்டுக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத கதை. காதல் சொட்ட சொட்ட... இளசுகளை தியேட்டருக்கு அள்ளிக் கொண்டு வந்த படம். வித்யாசாகரின் ‛காதல் பிசாசே...’ இசை, காற்றால் பரவி, கனமாய் எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருந்தது. நடிகர் மாதவனுக்கு பெரிய ஆக்ஷன் ஃப்ளாக்காக மாறிய படம். அறிமுகமானதிலே பெரிய மார்க்கெட்டை மீரா ஜாஸ்மினுக்கு பெற்றுத் தந்த படம். ரகுவரன், அதுல்குல்கர்னி, விவேக் என பலரும் முத்திரை பதித்த படம். 

View this post on Instagram
 
A post shared by DISA EDITZ💚 (@disa.editz)

ஏ.எம்.ரத்தினத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸிற்கு லாபத்தை கொட்டிக் கொடுத்த படம். இயக்குனர் லிங்குசாமியை கமர்ஷியல் ஹிட் இயக்குனர் என்கிற முகத்தை தந்த படம். இப்படி எல்லா வகையிலும் சாதகமாகவும், சாதனையாகவும் தமிழ்நாட்டு தியேட்டர்களை வலம் வந்த திரைப்படம் ரன். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 2002 ம் ஆண்டு, இதே நாளில் வெளியான ரன் திரைப்படம், ட்ரெய்லரில் ஏற்படுத்திய தாக்கம், தியேட்டர் வாசலில் பலரும் குவிந்து கிடக்க காரணமானது. எதிர்பார்ப்புகளை துளியும் குறையவிடாமல் அத்தனையையும் நிறைவேற்றிய திரைப்படம். இப்படி ஒரு படத்தை, இனி லிங்குசாமி நினைத்தாலும் தர முடியாது என்கிற அளவிற்கு பேசவைத்து, பேசப்படும் திரைப்படம் ‛ரன்’. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Republic Day 2026: குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Republic Day 2026: குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
Tata Punch 5 Star Rating: அப்படி போடு.! ரூ.5.59 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்குடன் டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்; வாங்குறதுக்கு கசக்குமா.?!
அப்படி போடு.! ரூ.5.59 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்குடன் டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்; வாங்குறதுக்கு கசக்குமா.?!
Ola Electric in Trouble: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்; ரூ.9,000 கோடி சந்தை மூலதனம் சரிவு; என்ன ஆச்சு.?
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்; ரூ.9,000 கோடி சந்தை மூலதனம் சரிவு; என்ன ஆச்சு.?
Hotspot2Much Review : ஹாட்ஸ்ப்டார் 2 திரைப்படம் எப்படி இருக்கு...விமர்சனம் இதோ
Hotspot2Much Review : ஹாட்ஸ்ப்டார் 2 திரைப்படம் எப்படி இருக்கு...விமர்சனம் இதோ
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
Embed widget