RRR Box Office: எந்திரன் 2.0 லைஃப்டைம் வசூல்... 10 நாட்களில் முறியடித்து கெத்துக்காட்டிய ஆர்ஆர்ஆர்! இவ்வளவு கோடியா..?
கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இன்று வரை பல நூறு கோடிகள் வசூலை குவித்திருக்கிறது.
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்(RRR) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.
இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியான இப்படம் இன்று வரை பல நூறு கோடிகள் வசூலை குவித்திருக்கிறது. படம் வெளியான 10 நாட்களில் 800 கோடி ரூபாய் வசூலை எட்டி புது சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதன்மூலம் சங்கர் இயக்கத்தில் கடந்த 2018 ம் ஆண்டு வெளியான எந்திரன் 2.0 வாழ்நாள் வசூல் சாதனையை ஆர்ஆர்ஆர் திரைப்படம் 10 நாட்களில் முறியடித்து வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
#RRR with ₹819.06 cr BEATS #2Point0's lifetime gross of ₹800 cr to become the 6th HIGHEST grossing Indian movie of all time.
— Manobala Vijayabalan (@ManobalaV) April 3, 2022
மேலும், இது RRR ஐ அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. தங்கல், பாகுபலி, தி கன்க்ளூசன், பஜ்ரங்கி பைஜான், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் மற்றும் பிகே ஆகியவை அதிக வசூல் செய்த முதல் 10 இந்தியப் படங்களில் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.
#RRR when we release our BOX OFFICE result in the Year end I'm sure you all going to be surprised 🔥
— Ram Muthuram Cinemas (@RamCinemas) April 3, 2022
BOX OFFICE RAGE shown by @ssrajamouli once again 👌
HOUSEFULL Matinee & Evening Show ahead 😎#RRRInRamCinemas pic.twitter.com/WhCC0YmVbA
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்