மேலும் அறிய

Actor Manager Cheena: இத்தனை ஆண்டுகளாக தெரியாத உண்மை.. நடிகர் மேனேஜர் சீனா இப்படிப்பட்டவரா?

சினிமாவில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் “மேனேஜர்” சீனா தன்னுடைய சினிமா அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

சினிமாவில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் “மேனேஜர்” சீனா தன்னுடைய சினிமா அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் சீனிவாச அய்யர். இவரை திரைத்துறையில் மேனேஜர் சீனா என சொன்னால் தான் பலருக்கும் தெரியும். நாடகங்கள் மூலம் நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த சீனா தற்போது நடிப்பில் இருந்து விலகி தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். இதுவரை 3800க்கும் மேற்பட்ட நாடகங்கள், மற்றும் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடத்தில் புகழ் பெற்றார். 

குறிப்பாக விவேக், வடிவேலு படங்களில் இவரின் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படியான நிலையில் சீனா தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.  அதில், “நான் வயசானதால் தான் நடிக்கவில்லை. இந்த வயதில் வசனம் எல்லாம் மறந்து போயிடும். என்னுடைய பெயருக்கு காரணம் நான் ஒரு நாடகத்தில் மேனேஜர் கேரக்டரில் நடித்தேன். அதில் டைட்டிலில் போட வேண்டும் என்பதற்காக என்னுடைய பெயருடன் சேர்த்து “மேனேஜர்” சீனா என ஒட்டிக் கொண்டது. நான் நிறைய நாடகத்தில் நடித்துள்ளேன். பள்ளியில் படிக்கும் போது சாயங்காலம் நேரம் நடிக்க போய் விடுவேன். அதன் பிறகு படங்களிலும் நடித்தேன்.

ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் நான் ஒரு விளையாட்டு வீரர். பி.என்.சிமெண்ட்ஸ் அணிக்காக விளையாடினேன். நான் ஓப்பனிங் பவுலர், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என ஆல் - ரவுண்டராக திகழ்ந்தேன். வேகப்பந்து வீச்சாளரான நான் 8 விக்கெட்டுகள் எல்லாம் எடுத்துள்ளேன். அந்த அணிக்காக நிறைய சாதனைகள் படைத்துள்ளேன். அதேபோல் கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டெல்லாம் விளையாடுவேன். 

அப்ப சம்பாதித்ததில் கொஞ்சம் சேர்த்து வைத்தது எல்லாம் இப்போது தேவைக்கு இருக்கிறது.  நடிகர் விவேக்கை நான் தான் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தேன். அப்போ விவேக் கோவையில் இருந்தார். மயிலாப்பூரில் உள்ள சபா ஒன்றில் நாடகங்கள் நடைபெற்றது. அதற்கு இயக்குநர் பாலசந்தர் வந்தார். கோவையில் இருந்து வந்த நாடக்குழுவில் விவேக் இருந்தார். அந்த நேரம் நான் சினிமாவில் நடிக்க தொடங்கியிருந்தேன். என்னுடன் இருந்த புரொடக்‌ஷன்ஸ் மேனேஜர் விவேக்கிற்கு சினிமா வாய்ப்புக்காக பரிந்துரைக்க சொன்னார். 

ஆனால் அந்த மேனேஜரே அடுத்த நாள் கே.பாலசந்தரிடம் அழைத்து சென்று விவேக்கை அறிமுகம் செய்தார். விவேக்கும் சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக பண்ணுவார். இருவரும் சேர்ந்து சில படங்கள் பண்ணினோம். வயதில் மூத்தவராக இருந்தாலும் ஜாலியாக தான் கூப்பிடுவார்” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Actor Yogi Babu: “தப்ப தட்டிக்கேட்டா என்னையே தப்பா பேசுறாங்க” - நடிகர் யோகிபாபு வேதனை

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget