மேலும் அறிய

Actor Yogi Babu: “தப்ப தட்டிக்கேட்டா என்னையே தப்பா பேசுறாங்க” - நடிகர் யோகிபாபு வேதனை

இயக்குநர் அருள் செழியன் இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “குய்கோ”. இந்த படம் நாளை (நவம்பர் 24) தியேட்டரில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழும் யோகிபாபு,  தனக்கு சினிமாத்துறையில் வருத்தம் அளிக்கும் சில தகவல்களை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் அருள் செழியன் இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “குய்கோ”. இந்த படம் நாளை (நவம்பர் 24) தியேட்டரில் வெளியாகிறது. மாடு மேய்ப்பவராக வரும் யோகிபாபுவுக்கு பெண் தர மாட்டோம் என சொல்வதால் சௌதிக்கு சென்று பணக்காரர் ஆகிறார் யோகிபாபு. 

அதேசமயம் தாயார் மரணமடையும் நிலையில் சொந்த ஊர் திரும்புகிறார். அப்போது அம்மாவின் உடல் காணாமல் போகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும். இந்த படம் தொடர்பாக யோகிபாபு பலவித நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். 

அதில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், தனக்கு சினிமாத்துறையில் வருத்தம் அளிக்கும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது, “ நான் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டதாக நினைக்கிறேன். இவர்களில் மணிகண்டன், மாரி செல்வராஜ், நெல்சன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். சுந்தர்.சி அவர்களுடன் 15 வருடங்களாக பயணப்பட்டு வருகிறேன். எனக்கு அவர் பாதுகாவலர் மாதிரியாக இருக்கிறார். நான் ஒரு கேள்வியை தான் கேட்கிறேன். 

சில பேரால் எனக்கு பிரச்சினை ஏற்படுகிறது. ரொம்ப கஷ்டப்பட்டு படம் பண்ணுகிறோம் என சொல்லி ஒரு சிறிய தொகை கொடுத்து 3 நாட்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்லி காட்சிகளை எடுத்து விடுகிறார்கள். நான் யாரை சொல்கிறேன் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். நான் அந்த படத்தில் 2, 3 சீன் மட்டுமே நடிக்கிறேன். ஆனால் எனக்கே தெரியாமல் பிசினஸ் என்கிற பெயரில் நான் தான் நடிக்கிறேன் என சொல்லி போஸ்டரை போட்டு விடுகிறார்கள். இதனை எத்தனைப் பேர் வாங்கிச் சென்றார்கள் என தெரியவில்லை. 

இதனால் என்னை வச்சு பிசினஸ் பண்ணுகிறவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தட்டிக்கேட்டால் என்னைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். இப்படி ஒரு தொடர்ச்சியாக பயணப்பட்டு வரும் நிலையில் என்னைப் பற்றி  நெகட்டிவ் விமர்சனங்கள் வர இது தான் காரணம். 

ஒருமுறை கவுண்டமணி சார் என்னிடம் சொன்னார். ‘ஓடிக்கிட்டே இரு. யாரும் கூப்பிட்டாங்கன்னு திரும்பி பார்த்திடாத. திண்ணையில உட்கார வச்சுருவாங்க’ என கூறினார். அந்த மாதிரி தான் இருக்குது. நமக்கு படம் பண்ண ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நிலையில் இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது” என தெரிவித்தார். 

மேலும் படிக்க: Today Movies in TV, November 23: இன்னைக்கு டிவி பார்க்க மறக்காதீங்க.. சூப்பர்ஹிட் படங்கள் போடுறாங்க..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
Embed widget