Thangalaan : பஞ்சாப்.. பீஹார்.. எங்க கூப்பிட்டாலும் வரேன்.. தங்கலான் ப்ரோமோஷனில் களமிறங்கும் விக்ரம்
Thangalaan : உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்கலான் படத்திற்கான ப்ரோமோஷன்கள் செய்ய இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது
![Thangalaan : பஞ்சாப்.. பீஹார்.. எங்க கூப்பிட்டாலும் வரேன்.. தங்கலான் ப்ரோமோஷனில் களமிறங்கும் விக்ரம் reasons behind vikram starrer pa ranjith directorial thangalaan release date postponed Thangalaan : பஞ்சாப்.. பீஹார்.. எங்க கூப்பிட்டாலும் வரேன்.. தங்கலான் ப்ரோமோஷனில் களமிறங்கும் விக்ரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/21/bc99a4a72b854326045a75f07f3a4f541705825338210572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Thangalaan Promotion : தங்கலான் படத்தின் ப்ரோமோஷனுக்காக தன்னை எந்த இடத்திற்கு கூப்பிட்டாலும் தான் வருவதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
தங்கலான்
விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் ஜனவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் ஏப்ரம் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் , பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையும் கிஷோர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ஏன் ரிலீஸ் தள்ளிப்போனது?
17-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க வயலில் வாழ்ந்த மக்களின் போராட்ட கதையை ரஞ்சித் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . சரித்திர கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வாக காத்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் தங்கலான் படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திப்போனதன் காரணத்தை தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ளார். தங்கலான் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவேண்டும் என்று படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தை வெளியிடுவதற்கு முன் நிறைய வேலைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் இது ஒரு பெரிய படம் என்பதால் இந்தப் படம் எந்த படத்துடனும் இல்லாமல் தனியாக ஒரு ரிலீஸ் தேதி தேவைப்படுகிறது. மேலும் தங்கலான் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை விரைவில் படக்குழு தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எங்க வேணும்னாலும் வரேன்..
#Thangalaan - Seems like a proper Pan Indian film arriving from Kollywood in terms of promotion 👌#ChiyaanVikram's plans & dedication 🫡👏pic.twitter.com/x3yiQzwHla
— AmuthaBharathi (@CinemaWithAB) January 20, 2024
தங்கலான் படத்தின் கதை யுனிவர்சலான கதை. இந்தப் படத்திற்கு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். மலேசியா , துபாய் , பீஹார், பஞ்சாப் என எங்கு கூப்பிட்டாலும் தான் வருவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார் என்று தனஞ்சயன் கூறியுள்ளார்.
தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் பான் இந்தியத் திரைப்படங்களில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விரைவில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க : Khushbhu - Modi : குஷ்புவின் 92 வயது மாமியார் தெய்வானையிடம் ஆசிபெற்ற பிரதமர் மோடி
Rajinikanth: ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)