Rashmika Mandanna Workout Video: தட்டித்தூக்கும் ராஷ்மிகா.. வெறித்தனமான வொர்க் அவுட்.. வைரலாகும் வீடியோ..!
ராஷ்மிகா மந்தனாவின் வொர்க் அவுட் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே அறிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு தான் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் குவித்து வைத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போதும் அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “ கார்டியோ, ஸ்குவாட்ஸ், லோ கிக்ஸ், துள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார். வெறித்தனமாக அம்மணி வொர்க் அவுட் செய்த இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், சூப்பர் என ஆம்ஸை மடக்கி விட்டு வருகின்றனர்.
View this post on Instagram
ஃபிட்னஸ் ரகசியம்
முன்னதாக தனது ஃபிட்னஸ் ரகசியம் பற்றி பேசியிருந்த ராஷ்மிகா ஒரு போட்டோவை பகிர்ந்து, “ இந்த போட்டோ உங்கள் பலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த ஸ்டோரி, உங்களின் ஃபிட்னஸ் பயணத்தில் மிக முக்கியமான கோலாக இருக்க வேண்டியது கன்சிஸ்டென்சி. இந்த கன்சிஸ்டென்சி உடன், உங்களின் வொர்க் அவுட், டயட், பிசியோ சார்ந்த பயிற்சிகளும் அடங்கும்” என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ரா வுடன் மிஷன் மஜ்னு படத்தில் அறிமுகமாக உள்ளார். இந்தப்படம் வருகிற ஜூன் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைதவிர்த்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் குட்பாய் படத்தில் நடிக்கிறார்.