HBD RAMBHA: ரம்பாவின் இந்த 7 பாடல்களை கேட்டு பாருங்க! நீங்களும் 90's கிட்ஸ் ஆவீங்க!

ரம்பாவின் பிறந்தநாளான இன்று, அவரது பாடல்கள் மூலம் உங்களை சில ஆண்டுகள் பின்னுக்கு அழைத்துச் செல்கிறோம்.

90களில் தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்ட ரம்பாவின் சிறந்த பாடல்கள் இன்றும், பலருக்கு பேவர் பிளே லிஸ்ட் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் பயணித்திருக்கும் ரம்பா நடித்த 90 கிட்ஸ்களின் பேவரிட் பாடல்களை இந்த காலையில் நினைவூட்டி, உங்களை சில ஆண்டுகளுக்கு பின் அழைத்துச் செல்கிறோம். 

1.பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ...

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ...

உழவன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வரும் இந்த பாடல் எப்போது கேட்டாலும் ஐஸ்கட்டியை உடைக்காமல் விழுங்கியதைப் போன்ற உணர்வு வரும். 

2.அழகிய லைலா... அவள் இவ்வளவு ஸ்டைலா...!

காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
பிக்காசோவின் ஓவியம் ஒன்று
பீத்தோவின் சிம்பனி ஒன்று
பெண்ணாய் மாறியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி....

உள்ளத்தை அள்ளித்தாவில் வைரமுத்துவின் வரிகளில் சிற்பி இசையமைத்த இந்த பாடல்... பார்த்தால் புரியும்!

3.அதுக்கு தான்...

சாந்து பொட்டு எதுக்கு
என் சாமி கலைப்பதற்கு
மூணு முடிச் எதுக்கு
என் முடிச்ச அவுப்பதுக்கு 
அட கூட்டி கழிச்சா வாழ்க்கை எதுக்கு
ரெண்டு கூடு சேர வழக்கெதுக்கு
இந்த தேனுண்ட வண்டுக்கு தேதி எதுக்கு

தேனிசை தென்றல் தேவாவின் இசையில், லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்த சுந்தரபுருஷனில் வரும் இந்தப்பாடலில், ரம்பாவை ரசிக்காத இதயமே இருக்காது!4.தென்றல் தென்றல் தென்றல் வந்து...

பூக்கள் வருடிய ராகத்தில் மனதிற்குள் பந்தாடும் வரிகளில் அஜித்-ரம்பா ஜோடி அசத்தியருக்கும் பாடல் இது. ராசி படத்தில் சிற்பி இசையில் துள்ளலும், இனிமையும் கலந்த பாடல் தென்றல் தென்றல் தென்றல் வந்து...

 5.உனை நினைத்து நான் என்னை மறப்பது அது தான்...

அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்
ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்
எல்லோா்க்கும் காதல்
வரும் என்றாலும் கல்யாண

வைபோகம் சில பேருக்கு தான்!

காதலன் காதலி தோற்பதுண்டு
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை
ஊா்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை

நிறம் மாறிப் போகாமல்
சுரம் மாறிப் போகாமல்
உயிா் பாடும் ஒரு பாடல் தான்
காதல் காதல் காதல் காதல்

இந்த வரிகள் போதும், காதலின் வலியை சொல்ல... கேளுங்கள் உங்களுக்கும் வலிக்கும். வாலி வரிகளில் தேவா இசையில் நினைத்தேன் வந்தாய் படத்திலிருந்து... 

6.ஊதா ஊதா ஊதாப்பூ...

ஓா்  உயில் தீட்டி வைப்பேன்
நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை
இனி எனக்காக என்று
ஓர் நெடுஞ்சாலை தன்னை

நான் கடந்தேனே அன்று

நிலம் கேட்டதம்மா

உன் நிழல் எங்கு என்று!

வாலியின் வரிகளில் தேவா இசையில் இளையதளபதியுடன் ரம்பா ஆடிய இந்த பாடல்க எப்போதும் திகட்டாத 90ஸ் ஹிட்!7.போகாதே நாடோடி நண்பா போகாதே...

உடல் மட்டும் தானே கடல் விட்டு தாண்டும்
நினைவிங்கு என்னோடு நீங்காமல் வாழும்
பகல் வந்த போது இருள் எங்கு போகும்
இருள் வந்த போது நிழல் எங்கு போகும்
எம் இமைகள் இங்கு மூடாமல் உன் விழிகள் அங்கே தூங்காதே
நீ மறந்தே தூங்கி போனாலும் நான் கனவில் வருவேன் அப்போதே
கனவுகள் வேண்டாம் கனவுகள் வேண்டாம் உயிரில் ஊஞ்சல் ஆடு

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் காதலின் பிரிவை ஆடலுடன் கூறியிருக்கும் அழகான பாடல்! ஒரு முறை கேட்டால் பலமுறை கேட்பீர்கள்!இது போல் இன்னும் பல ஹிட் பாடல்கள் இருக்கிறது. ரம்பாவின் ஹிட் லிஸ்ட் பெரிசாச்சே!

‛சார்... ரம்பா ஸ்வீட் சாப்பிடுது சார்...’ இன்னைக்கு அவங்க பெர்த் டேப்பா!

Tags: rambha hits hbdrambha actors rambha birthday spl rampa hits

தொடர்புடைய செய்திகள்

Incendies 2010 Movie Review |  அம்மா கொடுக்கும் டாஸ்க்.. வெளிவரும் அதிர்ச்சிகள் - ட்விஸ்டுக்கு பெயர் போன ''இன்செண்டீஸ்'

Incendies 2010 Movie Review | அம்மா கொடுக்கும் டாஸ்க்.. வெளிவரும் அதிர்ச்சிகள் - ட்விஸ்டுக்கு பெயர் போன ''இன்செண்டீஸ்'

Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!

Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!

‛ஹீரோ டூ காமெடியன்’ பெர்த் டே பாய் சத்யனின் டாப் 5 பாடல்கள்!

‛ஹீரோ டூ காமெடியன்’ பெர்த் டே பாய் சத்யனின் டாப் 5 பாடல்கள்!

‛விஷாலுக்கு எதிர்கால பயம்’ புகாருக்கு பதிலடி தந்த ஆர்.பி.செளத்ரி

‛விஷாலுக்கு எதிர்கால பயம்’ புகாருக்கு பதிலடி தந்த ஆர்.பி.செளத்ரி

‛தேவர் மகன் டூ வாலி....’ மிஸ் செய்த படங்களை நினைத்து வருந்தும் நடிகை மீனா!

‛தேவர் மகன் டூ வாலி....’ மிஸ் செய்த படங்களை நினைத்து வருந்தும் நடிகை மீனா!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

UEFA Euro 202: யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: துருக்கி - இத்தாலி மோதல்..!

UEFA Euro 202: யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: துருக்கி - இத்தாலி மோதல்..!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

மரத்தில் ஏறி மனதை இறக்கும் நடிகை ஷாலு ஷம்மு!

மரத்தில் ஏறி மனதை இறக்கும் நடிகை ஷாலு ஷம்மு!