Watch video : மனைவிக்கு கால் பிடித்து விடும் ராம் சரண்! வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் நடிகரின் லவ்லி வீடியோ !
Watch video : ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா ரொமான்டிக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வரு கிறது.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சிறுத்தை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து ஏராளமான விருதைகளை குவித்துள்ளார். அதிலும் 2022ம் ஆண்டு எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராம் சரண் ஒரு சர்வதேச செலிபிரிட்டியாக பிரபலமானார். அப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலின் பிரிவில் ஆஸ்கர் விருதினை கைப்பற்றி இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது. இதனால் அவரின் மார்க்கெட் ரேட் பல மடங்கு எகிறியது.
நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா கொனிடேலாவுடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒரே பள்ளியில் 9ம் வகுப்பு வரை படித்தவர்கள். 10 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த அன்பான அழகான ஜோடி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அவர்கள் போஸ்ட் செய்யும் ஒவ்வொரு புகைப்படத்துடன் அவர்கள் எழுதும் உணர்வுபூர்வமான குறிப்புகள் மூலம் அவர்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தி கொள்வார்கள்.
அந்த வகையில் ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா ஜோடி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து குஜராத் ஜாம்நகரில் நடைபெற்று வரும் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக சென்றனர். அங்கே விமானத்தில் எடுக்கப்பட்ட இந்த காதல் ஜோடியின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
🥹❤️@AlwaysRamCharan @upasanakonidela pic.twitter.com/dmGBnk7V5Q
— Raees (@RaeesHere_) March 1, 2024
நடிகர் ராம் சரண் மிகவும் அன்பான கணவன் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அவர் தனது மனைவி உபாசனாவின் படங்களை மசாஜ் செய்வதை அந்த வீடியோவில் காண முடிகிறது. இது அவர்களுக்குள் இருக்கும் ஒப்பில்லா அன்பின் வெளிப்பாடாகும். சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட அவர்களின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்க விடுகிறார்கள்.