Rajinikanth : ”ஹீரோவா நடிக்க துளி கூட விருப்பமில்ல.. அது தாலி வித்த காசுன்னு தெரியாது” - நெகிழ்ந்த ரஜினிகாந்த்
"அந்த படத்துல எனக்கு கிரேட் சூப்பர் ஸ்டார்னு அடைமொழி கொடுத்திருந்தாங்க. அது வேண்டாம்னு சொன்னேன்"
சூப்பர் ஸ்டார் என இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றிய ரஜினிகாந்தை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள். அதன்பிறகும் ரஜினியை சினிமாவில் வழிநடத்தியவரும் பாலச்சந்தர்தான். ரஜினி அந்த குரு பக்தியை இந்நாள் வரையிலும் மறக்கவில்லை. ரஜினி ஆரம்ப நாட்களில் வில்லனாக மட்டுமே நடித்து வந்தார். அந்த சமயத்தில்தான் எம்.பாஸ்கர் இயக்கத்தில் வள்ளிவேலம் மூவிஸ் , கலைஞானம் தயாரிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஹீரோவா நடிக்க அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதனை அவரே மேடையில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
“கலைஞானம் சார் ஒரு முறை என்னை பார்க்கனும் என கூறியிருந்தார். அந்த சந்திப்பில் முதன் முறையாக நான் படம் தயாரிக்க போகிறேன் என்றார். உடனே நான் அப்படியா சூப்பர் , ஹீரோ யார் என கேட்டேன், நீங்கதான் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சத்தியமாக சொல்லுறேன் எனக்கு ஹீரோ ஆகுற ஆசை இருந்ததே கிடையாது. நான் கண்டக்டராக இருந்தேன் , ஒரு ஃபிளாட்டு , ஒரு ஸ்கூட்டர் , வில்லன்னு ஒரு கேரக்டர் அப்படினு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன். அதுவே எனக்கு மிகப்பெரிய விஷயம். அந்த சமயத்தில் வில்லன்களும் ஹீரோவுக்கு இணையாகத்தான் சம்பளம் வாங்குனாங்க. எனக்கு டான்ஸ் வேற வராது வேண்டாம்னு சொல்லிட்டேன். நடராஜன் என்னிடம் வந்து சிவாஜி இந்த கதை நல்லா இருக்கு பண்ணு அப்படினு சொன்னாங்க. நானும் கதை கேட்டேன். அருமையாக இருந்தது. ஆனால் சம்பளம் 35 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரமாக கேட்டேன். அடுத்த நாளே அட்வான்ஸை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் கலைஞானம் சார்.
அப்போ சத்தியமாக எனக்கு தெரியாது அது தாலியை விற்ற பணம் என்று. அந்த படத்துல எனக்கு கிரேட் சூப்பர் ஸ்டார்னு அடைமொழி கொடுத்திருந்தாங்க. அது வேண்டாம்னு சொன்னேன். கிரேட்ட வேண்டுமானால் எடுத்துவிடுகிறோம் . சூப்பர் ஸ்டார் அப்படியேத்தான் இருக்கும் என மறுத்துவிட்டார்கள். படம் வெளியான பிறகு என்னை ரசிகர்கள் தூக்கிட்டாங்க. நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு மிகப்பெரிய இயக்குநர்கள் எல்லாம் என்னை சுற்றிவர ஆரமித்துவிட்டார்கள். நான் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தேன். நான் ஒரு முட்டாள் மீண்டும் கலைஞானம் சாரிடம் அடுத்த படம் பண்ணலாமா என கேட்காமல் விட்டுட்டேன். அவராவது கேட்டிருக்கலாம் இல்லையா. எவ்வளவு படம் வேண்டுமானாலும் கொடுத்திருப்பேன். 10 படம் பண்ணியிருக்கலாம். அதான் நேரம்.. அவர் ஒரு தன்மானம் மிக்கவர். கோவமும் அதிகம். நான் ஏன் ரஜினியிடம் கேட்கணும். குழந்தை அழுதால்தானே தாயே பால் கொடுப்பாங்க “ என்றார் ரஜினி .