Padayappa: "சிறுசு முதல் பெருசு வரை.." படையப்பாவின் படையாக மாறிய தியேட்டர்கள் - ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Padayappa: ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகியுள்ள படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைவாழ்வில் தவிர்க்க முடியாத திரைப்படம் படையப்பா. ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
படையப்பா ரீ ரிலீஸ்:
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 26 ஆண்டுகளுக்கு முன்பு 1999ம் ஆண்டு வெளியான இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம். பாட்ஷா படத்தை காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் இந்த படம்.
ஆக்ஷன், காமெடி, காதல் என குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக இந்த படம் அமைந்தது. இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், 2 கே கிட்ஸ் என படத்தை வயது வித்தியாசமின்றி திரையரங்கில் குவிந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
6 முதல் 60 வயது வரை அனைவராலும் கொண்டாடப்படும் சூப்பர்ஸ்டாரின் படையப்பா ...😍💥🏆🤘🏻#Rajinikanth𓃵 #Padayappa #PadayappaReRelease #HBDRajinikanth pic.twitter.com/mzCy73fTca
— PSK (@shagul_psk) December 12, 2025
கொண்டாடும் ரசிகர்கள்:
திரையரங்கில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்த் - ரம்யா கிருஷ்ணன் காட்சிகள் ரசிகர்கள் காலத்திற்கும் கொண்டாடும் காட்சிகள் ஆகும். ரஜினிகாந்தின் அறிமுக காட்சி, ரம்யா கிருஷ்ணன் காட்சிகள், ரஜினி ஊஞ்சலை எடுக்கும் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள கைதட்டி கொண்டாடி வருகின்றனர்.
பிரபலம்:
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி, ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா நடித்திருப்பார்கள். ஏப்ரல் 10ம் தேதி 1999ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான இந்த படம் 210 ப்ரிண்ட் மற்றம் 7 லட்சம் ஆடியோ கேசட்கள் அப்போதே விற்பனையாக வசூல் மழையை குவித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகும்.
இந்த Scene அடிச்சிக்க இன்னும் தமிழ் சினிமால எந்த Mass சீனும் வரல..!! 😍😍😍🔥🔥🔥💥💥💥 #HBDSuperstarRajinikanth#PadayappaReRelease #Padayappa https://t.co/KKXdfdaM5q pic.twitter.com/VdV4d7kNHS
— MSK (@sendil9Oskid) December 12, 2025
பிரம்மாண்ட வெற்றி:
Even in 2075 #Padayappa will remain truly special @rajinikanth ❤️🔥🔥🔥#HBDSuperstar #HBDSuperStarRajinikanth #Thalaivar pic.twitter.com/iMD4uuL6qP
— Achilles (@Searching4ligh1) December 12, 2025
இந்த படத்தில் செந்தில், மணிவண்ணன், ராதாரவி, சித்தாரா. நாசர், செந்தில், அப்பாஸ், ப்ரீதா, அனுமோகன், ரமேஷ் கண்ணா, வடிவுக்கரசி மன்சூர் அலி கான் என பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருப்பார்கள். ரஜினியின் பஞ்ச் வசனங்கள், ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு, செளந்தர்யா - ரஜினி காதல் காட்சிகள் என படம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. அந்தாண்டு வெளியான படங்களிலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் படையப்பா.
அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு மூர்த்தி, பிரசாத் ஒளிப்பதிவு செய்திருப்பார்கள். தணிகாச்சலம் படத்தொகுப்பு செய்திருப்பார்.





















