இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய சவால் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதே ஆகும்.
நாம் சாப்பிடும் சில உணவுகள் நமது சருமத்தை கடுமையாக பாதித்து வயதான தோற்றத்தை உண்டாக்குகிறது.
சருமங்களைப் பராமரிக்கு வெளிப்புறத்தில் என்ன பயன்படுத்தினாலும் உணவே சரும பராமரிப்புக்கு முக்கியமானது ஆகும்.
அதிகளவு உப்பு உடலில் நீரிழப்பு பாதிப்பை உண்டாக்கிறது. இதனால், மந்தமான, வறண்ட சரும பாதிப்பு ஏற்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் வயதாகும் தோற்றத்தை விரைவில் உண்டாக்கும். சருமத்தின் நெகிழ்வு தன்மையை உண்டாக்கும்.
அதிகளவு சர்க்கரையை உட்கொள்வது கொலாஜனை பாதிக்கும். சருமத்தில் மெல்லிய ரேகைகளை உண்டாக்கும்.
பொரித்த உணவுகள் உடலில் மிகவும் பாதிப்பை உண்டாக்கும். சருமத்திற்கான செல்களை இது பாதிக்கும்.
குளிர்பானங்கள் சருமத்தில் கடும் தாக்கத்தை உண்டாக்கும். இதனால், வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
மது அருந்துவதால் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கல்லீரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சருமத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது.
அதிகளவு காஃபின் உட்கொள்வதும் சருமத்தை பாதிப்படையச் செய்யும். சருமம் வறண்டும், முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தும்.
சிவப்பு இறைச்சியை அதிகளவில் எடுத்துக் கொள்வதால் கொலாஜன் உற்பத்தியை பாதிக்கும். வயதான தோற்றத்தை விரைவில் உண்டாக்கும்.