மேலும் அறிய

ரஜினியை திரும்பிபார்க்க வைத்த ரசிகர்...இணையத்தில் வைரலாகும் வீடியோ

விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் ரஜினியை சந்தித்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .

நடிகர் ரஜினிகாந்திற்கு அண்மையில் மத்திய அரசு நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்றுக்கொள்ள ரஜினி தனது மகள் மற்றும் பேரன்களுடன் கோவா புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 

ரஜினியின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தை கெளரவிக்கும் விதமாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில் ரஜினி இந்த விருதை கோவா சென்று பெற்றுக்கொண்டார். விருது பெற்ற பின் ரஜினி தனது திரைப் பயணத்தைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். " இன்று திரும்பி பார்க்கையில் 50 ஆண்டுகள் கடந்ததே தெரியவில்லை. ஏதோ 10- 15 ஆண்டுகள் போல் 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. நடிப்பையும் சினிமாவையும் நான் அவ்வளவு நேசிக்கிறேன். இன்னும் 100 பிறவிகள் எடுத்தாலும் ரஜினி என்கிற நடிகனாக நான் பிறக்கவே ஆசைப்படுகிறேன். இந்த விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் முக்கியமாக என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என ரஜினி கூறினார்

ரஜினியை சந்தித்த ரசிகர்

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற சென்றபோது ரஜினியை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் சந்தித்து அவரிடம் ஆட்டோகிராப் பெற்றார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் உணர்ச்சிவசமாக பதிவு செய்துள்ளார்.  ரஜினி சென்ற ஒரே விமானத்தில்  பயணித்த அந்த ரசிகர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ரஜினியை வரைந்துள்ளார்.  எப்படியாவது ரஜினியின் கையெழுத்தை வாங்கிவிட நினைத்தார். ஆனால் விமானத்தில் ரஜினி தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை நெருங்கவில்லை . ஆனா விமான நிலையத்தில் ரஜினி இறங்கிச் சென்றபோது அவரை விரட்டிச் சென்று ரஜினியின் கையெழுத்தை வாங்கியுள்ளார் அந்த ரசிகர். இந்த வீடியோவை அந்த ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Embed widget