நெப்போலியனை விடுங்க... 30 கோடியில் செட் போட்டு மகள் திருமணத்தை தடபுடலாக நடத்த போகும் தயாரிப்பாளர் யார் தெரியுமா?
நெப்போலியனுக்கு போட்டியாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனது மூத்த மகளின் திருமணத்தை தடபுடலாக செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் செட்டியாலாகி, தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி உள்ளவர் நடிகர் நெப்போலியன். கடந்த ஆண்டு தனது மகன் தனுஷுக்கு ஊர், உலகம் மெச்சிக்கும் வகையில் திருமணத்தை ஜப்பானில் தடபுடலாக நடத்தி வைத்தார். இப்போது அவருக்கு போட்டியாக தயாரிப்பாளர் ஒருவர் மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் யார் என்ன என்பது பற்றி பார்ககலாம்.
அந்த தயாரிப்பாளர் வேறு யாரும் அல்ல, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் தான். இவர், தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட் மூலமாக கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான படங்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார். இவருடைய மூத்த மகள் பிரீத்தா கே கணேஷுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதைத் தொடர்ந்து நாளை (மே 9-ஆம் தேதி) பிரீத்தாவின் திருமணம் மிக பிரம்மாண்டமாக, ஊர் உலகம் மெச்சிக்கும் வகையில் நடைபெற இருக்கிறதாம். இதற்காக தனது பணத்தை தண்ணீராக செலவு செய்ய ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளாராம்.

இந்த திருமணத்தில் 10,000 பேராவது வருவார்கள் என்பதால்... திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு என்று தனியாக செட் அமைத்துள்ளார். சென்னை ஈசிஆரிலுள்ள பழைய டிரைவின் தியேட்டரான பிரார்த்தனா தியேட்டரில் தான் ரூ.30 கோடிக்கு செட் போடப்பட்டு வருகிறதாம். இங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், அந்த பகுதியில் உள்ள ஆர்கே மஹாலில் திருமணம் நடைபெற இருக்கிறது.
தனது மகளின் திருமணத்திற்காக அரசியல், சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி நெருங்கிய உறவினர்கள், சொந்த பந்தங்கள் என்று கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமானோருக்கு திருமண அழைப்பிதழும் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி வேல்ஸ் நிறுவனத்தின் பணியாற்றும் பணியாளர்கள் என்று கிட்டத்தட்ட 8000-திற்கும் மேற்பட்ட பலர் வருகை தர இருக்கிறார்களாம். மேலும், வயதானவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள் என்று அனைவருக்கும் திருமண மண்டபத்தில் சாப்பிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த திருமணத்தைத் தொடர்ந்து மாலத்தீவு பகுதியிலும் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இது பிரீத்தாவின் விருப்பமாம். இதற்காக தனியாக பிளைட்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம், இந்த திருமண நிகழ்ச்சிக்கு என்று 300 பேர் மாலத்தீவு செல்கிறார்களாம். பிரீத்தாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஒரு ஆர்க்கிடெக்ட்டாம். எந்த ஒரு விஷயத்திலும் பணத்தை மட்டும் பார்க்காத ஐசரி கணேஷ் தன்னுடைய மகள் விஷயத்திலும் இதேயே செய்துள்ளார். அதாவது ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவருக்கு தான் தன் மகளை ஐசரி கணேஷ் திருமணம் செய்து வைக்க உள்ளார். மாப்பிள்ளையின் குணம், மற்றும் அவர் எல்லோருக்கும் கொடுக்கும் மரியாதை... போன்ற அடிப்படை குணங்களை கருத்தில் கொண்டும், தன்னுடைய மகளுக்கும் மணமகனை மிகவும் பிடித்ததால் இந்த திருமணம் நடக்க உள்ளதாக தகவல்.





















