Prince Movie trailer: வெளியானது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது
சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஃபேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் படமாக இது உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் ட்ரைலரானது, தற்போது வெளியானது.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
Here is our #PrinceTrailer - https://t.co/644ReR6Whs
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 9, 2022
Hope you all like it😊👍#Prince🕊️#PrinceOnOct21st in theatres👍#PrinceDiwali💥@anudeepfilm @maria_ryab @musicthaman @SVCLLP @SureshProdns @ShanthiTalkies
இத்திரைப்படத்தில் பிரிட்டிஷ் பெண்ணை நடிகர் காதலிப்பது போன்று ட்ரைலர் காட்சிகள் உணர்த்துகிறது. இத்திரைப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பிரின்ஸ் படத்தில் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பிம்பிலிக்கி பிலாக்கி என தொடங்கும் இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
தொடர்ந்த் பிரின்ஸ் படத்தின் 2 ஆம் பாடலாக ஜெஸிக்கா பாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதி தான் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தீபாவளிக்கு 24 நாட்களே இருந்த நிலையில் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தீபாவளிக்கு கண்டிப்பா ரிலீஸ் என்ற அறிவிப்போடு ஒரு போஸ்டர் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகியிருந்தது.
View this post on Instagram
அதன்பின் பிரின்ஸ் படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 21 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் படம் முதல் முறையாக தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் இப்படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.