மேலும் அறிய

Vijayakanth: செருப்பு அணியாமல் காவி வேட்டியோடு சாமியாராக வந்த விஜயகாந்த்.. பெண் பார்க்க வந்த தருணத்தை பகிர்ந்த பிரேமலதா..!

தனது கணவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தான் முதன்முதலாக சந்தித்த தருணத்தை பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தனது கணவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தான் முதன்முதலாக சந்தித்த தருணத்தை பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த நேர்காணலில், “என்னை பெண் பார்க்க வந்த போது தான் நான் முதன்முதலில் கேப்டனை பார்த்தேன். உங்க எல்லோரையும் மாதிரி நான் திரையில் அவரை பார்த்து ரசித்தது தான் அதிகம். நான் கல்லூரியில் படித்த காலத்தில் உழவன் மகன் படத்தைப் பார்த்துவிட்டு, விஜயகாந்தின் தீவிர ரசிகையாக மாறி விட்டேன். அப்படியான நிலையில் எங்களுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என சொல்லப்படுவதற்கு எங்கள் திருமணம் சான்று.

காரணம் விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை. எனக்கு வேலூர் என்பதால் இருவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் சபரிமலைக்கு 48 நாட்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பார். அப்படி ஒரு டிசம்பர் மாதம் தான் என்னை பெண் பார்க்க குடும்பத்தினரோடு வந்தார். காவி வேட்டி கட்டி, காலில் செருப்பு இல்லாமல், சன்னியாசி மாதிரி தான் வந்தார். அவரை எப்படி வரவேற்பது என்று  என் வீட்டில் இருந்த அனைவரும் யோசித்து கொண்டிருக்கும் போது அவர் சாதாரணமாக எளிமையாக நடந்து வந்ததை என் அம்மா பார்த்து முடிவு செய்துவிட்டார். 

என்கூட பிறந்த சகோதரன் மாதிரி தான் விஜயகாந்தை பார்க்கிறேன். இப்படிப்பட்ட ஒருவருக்குத்தான் என் பொண்ணை கொடுப்பேன் என பெற்றோர்கள் முடிவு செய்துவிட்டனர். திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் எல்லாம், சினிமா காரனுக்கு எப்படி பெண்னை கொடுக்குறீர்கள் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் என் பெற்றோர்கள் எங்களுக்கு விஜயகாந்த் மீது நம்பிக்கை இருக்கு, என் மகளை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று தீர்க்கமாக இருந்து திருமணம் செய்து வைத்தார்கள்.

பெண் பார்க்க வந்தபோது விஜயகாந்திடம் என்ன படம் நடிக்கிறீர்கள் என அப்பா கேட்டார். இப்போது மீனாட்சி திருவிளையாடல் ரிலீசாகி இருக்கு. அடுத்து சிறையில் பூத்த சின்னமலர் படத்தின் ஷூட்டிங்கிற்காக நாகர்கோயில் போறேன். அடுத்து புலன் விசாரணை படத்துக்காக மும்பை போறேன். போய்ட்டு வந்ததும் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என சொன்னார். விஜயகாந்த் என்னை திருமணம் செய்ய சம்மதம் சொன்ன பிறகு பல நாட்கள் எனக்கு தூக்கமே வரவில்லை. 

எங்கள் திருமணம் 1990 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. மார்ச் மாதம் என்னுடைய முதல் பிறந்த நாள் வந்த போது 'V' என்ற எழுத்துப்போட்ட டாலரை பரிசாக கொடுத்தார். என்னிடம் எத்தனையோ நகைகள் இருக்கிறது என்றாலும், என் கணவர் கொடுத்த அந்த பரிசை பொக்கிஷம் போல இன்றும் பாதுகாத்து வைத்து இருக்கிறேன். நான் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரிய அவார்டு தான் அந்த பரிசு என  பிரேமலதா தெரிவித்துள்ளார். 

ALSO READ | September 2023 Festivals: பக்தர்களே... விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி.. செப்டம்பரில் இவ்வளவு பண்டிகையா..?

தலைப்பு செய்திகள்

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget