September 2023 Festivals: பக்தர்களே... விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி.. செப்டம்பரில் இவ்வளவு பண்டிகையா..?
Spiritual Events in September 2023: செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது.
September 2023 Spiritual Events: ஒவ்வொரு மாதமும் வரும் நவமி, அஷ்டமி, பஞ்சமி போன்ற நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் ஆகும். அந்த விதத்தில் ஆகஸ்ட் மாதம் வரும் வியாழனுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் வரும் வெள்ளிக்கிழமை பிறக்க உள்ளது.
புதியதாக பிறக்க உள்ள செப்டம்பர் மாதத்தில் என்னென்ன தேதிகளில் என்னென்ன விரத நாட்கள் வருகிறது என்பதை கீழே காணலாம்.
செப் – 3 – சங்கடஹர சதுர்த்தி ( ஞாயிற்றுக்கிழமை)
செப் – 5 – கார்த்திகை விரதம், பலராம ஜெயந்தி, ஆசிரியர் தினம் (செவ்வாய்)
செப் – 6 – கிருஷ்ண ஜெயந்தி ( புதன்கிழமை)
செப் – 8 – தேவமாதா பிறந்த நாள் (வெள்ளிக்கிழமை)
செப் – 10- ஏகாதசி விரதம் (ஞாயிற்றுக்கிழமை)
செப் - 12 – பிரதோஷம் (செவ்வாய்)
செப் – 13 – மாத சிவராத்திரி (புதன்)
செப் - 14 – அமாவாசை (வியாழன்)
செப் – 16 – சந்திர தரிசனம் (சனிக்கிழமை)
செப் -17 – விநாயகர் சதுர்த்தி, விஸ்வகர்மா ஜெயந்தி, கன்னி சங்கராந்தி (ஞாயிற்றுக்கிழமை)
செப் - 18 – சபரிமலை நடை திறப்பு, சோமவார விரதம் (திங்கள்கிழமை)
செப் - 19 – சதுர்த்தி விரதம் (செவ்வாய்)
செப் - 20 – ரிஷி பஞ்சமி (புதன்)
செப் – 21 – சஷ்டி விரதம் (வியாழன்)
செப் - 22 – மகாலட்சுமி விரதம் (வெள்ளி)
செப் - 23 – ஏகாதசி விரதம் (சனி)
செப் -26 – திருவோண விரதம், ஏகாதசி விரதம் (செவ்வாய்)
செப் - 27 – பிரதோஷம் (புதன்)
செப் – 28 – மிலாடி நபி ( வியாழன்)
செப் – 29 – மகாளயபட்சம் ஆரம்பம், பெளர்ணமி, பௌர்ணமி விரதம் (வெள்ளி)
விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, மிலாடி நபி:
செப்டம்பர் மாதத்தில் மிக முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தியும், கிருஷ்ண ஜெயந்தியும் வருகிறது. இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபியும் இந்த மாதத்திலே வருகிறது. மேலும், ஆசிரியர் தினம், பாரதியார் நினைவு நாள் வருகிறது.
மேலும் படிக்க: திருவேள்விக்குடி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக விழா
மேலும் படிக்க: Tiruvannamalai Temple: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை - வசூல் எவ்வளவு தெரியுமா..?