LIK : அடுத்தடுத்து இரண்டு படங்களை வெளியிடும் பிரதீப் ரங்கநாதன்...எல்.ஐ.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது

பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து இரண்டாவது படமான லவ் டுடே படத்தில் அவரே நடித்து நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படம் வசூல் ரீதியாக மிகப்பெரியளவில் வெற்றிபெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரியளவில் கவனமீர்த்துள்ள பிரதீப் ரங்கநாதன் தற்போது அடுத்தடுத்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்த எஸ்.ஐ.கே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
எல்.ஐ.கே ரிலீஸ் தேதி
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி. பிரதீப் ரங்கநாதன் , க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 2024 ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது. சைன்ஸ் ஃபிக்ஷன் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
A Love Festival in theatres from SEPTEMBER 18th 🤍🩵💛❤️💚💙#LIKfromSeptember18#LoveInsuranceKompany
— Seven Screen Studio (@7screenstudio) May 12, 2025
#VigneshShivan @pradeeponelife @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial #RaviVarman @iYogiBabu @Gourayy @PradeepERagav @muthurajthangvl@PraveenRaja_Off… pic.twitter.com/O8Oyw5sk4n
டூட்
அடுத்தபடியாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடித்து வரும் படம் டூட். மமிதா பைஜூ இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சுதா கொங்காராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்திவாசன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். சாய் அப்யங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.
செப்டம்பர் , அக்டோபர் அடுத்தடுத்து இரு படங்கள் வெளியாவதால் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.





















