Watch Video: அம்மாச்சியாக மிரட்டும் கோவை சரளா; வெளியானது ‘செம்பி’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்!
பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'செம்பி'.
தமிழ் சினிமாவின் கண்ணோட்டத்தை வேறு விதமாக பயணிக்க வைத்த ஒரு இயக்குனர் பிரபு சாலமன். அதற்கு உதாரணம் அவரின் இயக்கத்தில் வெளியான கும்கி, கயல், மைனா உள்ளிட்ட திரைப்படங்கள். அவரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது 'செம்பி'. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது, இரண்டாவது டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷ் செம்பி படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்.
மீண்டும் பேருந்தை சுற்றி திரைக்கதை :
மைனா படத்தில் எப்படி பேருந்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததோ, அதே போல 'செம்பி' திரைப்படமும் ஒரு பேருந்து பயணத்தை மையப்படுத்தி, மிகவும் திரில்லிங்கான ஒரு கதையம்சத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் செல்லும் 1985ம் ஆண்டு மாடல் கொண்ட பழைய பேருந்து இப்படத்தின் முக்கியமான ஒரு அங்கமாக பயணித்துள்ளது. 24 பயணிகளுடன் செல்லும் இந்த பேருந்தில் நிகழும் சம்பவங்களே படமாக்கப்பட்டுள்ளன. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் ஜீவன்.
Delighted to launch the second trailer of #SEMBI!
— Dhanush (@dhanushkraja) December 16, 2022
➡️ https://t.co/0NJeFklMTT
Best wishes to the team@tridentartsoffl @arentertainoffl @prabu_solomon @RedGiantMovies_ #Kovaisarala @i_amak @nivaskprasanna #AjmalKhan @actressReyaa @MShenbagamoort3 @saregamasouth @onlynikil
கோவை சரளாவின் சீரியஸ் பக்கம்:
முக்கியமான கதாபாத்திரத்தில் 70 வயது கொண்ட அம்மாச்சியாக நடித்துள்ளார் தமிழ் சினிமாவின் நகைச்சுவை ராணியாக நடித்துள்ளார் கோவை சரளா. இது வரையில் ஒரு காமெடி குயினாகவே பார்க்கப்பட்ட கோவை சரளாவை ஒரு வித்தியாசமான கோணத்தில் மலைவாசியாக மிகவும் சீரியஸான கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார், தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததால் டிசம்பர் 30ம் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.
Those eyes, where those range of emotions are coming from !!
— ✌🏻 (@beyoutisunset) December 16, 2022
Trailer looks intriguing!! Looking forward for your role in #Sembi, Ashwin! @i_amak pic.twitter.com/7ZhXZUwrx7
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான காடன் மற்றும் தொடரி திரைப்படங்கள் இரண்டுமே தோல்வியை சந்தித்ததால் மீண்டும் அவரின் பழைய பணியில் மலை, காடு, கடல் என்ற பழைய கான்செப்ட்டிற்கே சென்றுவிட்டார் இயக்குனர்.