மேலும் அறிய

Prabhas: சலாருக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் பிரபாஸ்.. ஏன் தெரியுமா?

இப்படத்தை RRR பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிப்பதாகக் கூறப்படும் நிலையில், அமானுஷ்யம் நிறைந்த த்ரில்லர் படமாக இப்படம் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சலார் படத்தில் நடித்து வரும் பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர் தோல்விப் படங்கள்

தெலுங்கு சினிமா, தென்னிந்தியா தாண்டி வட இந்தியாவின் கடைக்கோடி வரை பாகுபலியாக ரசிகர்களைக் கவர்ந்த பிரபாஸ் ‘பான் இந்தியா’ ஸ்டாராக உருவெடுத்த நிலையில், ’சாஹோ’, ’ராதே ஷ்யாம்’ என அடுத்தடுத்து ஹை பட்ஜெட் தோல்விப் படங்களை வழங்கி தன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் சுழலில், அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas)

இப்படத்தின் படப்பிடிப்பு பெருமளவும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபாஸின் அடுத்த படம்

’ஈ ரோஜுலு’, ’பலே பலே மகடிவாய்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய தெலுங்கு சினிமா இயக்குநர் மாருதியுடன் தன் அடுத்த படத்தில் பிரபாஸ் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இப்படத்தை RRR பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிப்பதாகக் கூறப்படும் நிலையில், அமானுஷ்யம் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவல் குறித்து முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மாருதி, ”இது மிகப்பெரும் படம், பிரபாஸ் மூன்று பெரிய  பட்ஜெட் படங்களை இயக்கி வருகிறார். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும், இந்த வாரம் படத்துக்கான பூஜை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Boycott சொல்லும் ரசிகர்கள்

இந்நிலையில் முன்னதாக இயக்குநர் மாருதியின் படத்தை புறக்கணிக்கும்படியும், பிரபாஸ் ஏற்கெனவே தோல்விப் படங்களை வரிசையாக வழங்கி வருகிறார் என்றும் அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தவிர, நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் ப்ராஜக்ட் கே படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்

 Amitshah meet Junior NTR: மல்லுக்கட்டும் மருமகன்.. பேரனுக்கு மடைமாறும் பாஜக! ஜூனியர் என்.டி.ஆரை குறிவைக்கும் அமித்ஷா?!

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget