Poonam Kaur: சமந்தாவை தொடர்ந்து வாழ்நாள் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை! - நடந்தது என்ன?
கோலிவுட் நாயகி சமந்தாவையடுத்து கொடிய குறைப்பாட்டால் பாதிக்கப்படும் 'நெஞ்சிருக்கும் வரை' ஹீரோயின்..!
நெஞ்சிருக்கும் வரை படத்தில் நரேனுக்கு ஜோடியாக நடித்த பூனம் கெளருக்கு தற்போது “ஃபைப்ரோமியால்ஜியா” என்ற குறைபாடு ஏற்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்தவர் பூனம் கவுர். ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் நடிகர் நரேனுக்கு ஜோடியாக நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன் , பயணம் , வெடி போன்ற படங்களில் நடித்தார். தற்போது கேரளாவில் வசித்து வரும் இவருக்கு, “ஃபைப்ரோமியால்ஜியா” ( எலும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள தசை பகுதிகளில் ஏற்படும் குறைபாடு) எனும் நோய் தாக்கியுள்ளது.
View this post on Instagram
இந்த குறைபாட்டினால், சோர்வு, உறக்கம், நியாபக மறதி மற்றும் மனநிலை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். இந்த குறைப்பாட்டை படிபடியாக குறைக்க உடற்பயிற்சி மற்றும் மருந்துகளே தீர்வு என்ற பல ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த குறபாடானது, வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய பிரச்னையாகும். இதனால், இரண்டு ஆண்டுகளாக பூனம் பயங்கரமான உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
View this post on Instagram
சமூக ஆர்வலராக இவர் நெசவு தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்குபெற்று, கைத்தறி நெய்பவர்களின் பிரச்னை குறித்து பிரசாரம் செய்துள்ளார்.