மேலும் அறிய

TVK Vijay: "தளபதி வந்தாதான் தமிழ்நாடே உருப்புடும்.." : மோடி குரலில் விஜய்க்கு ஒரு பாடல்!

நீண்ட காலமாக அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் செயல்பாடுகள் அதை உறுதி செய்யும் வண்ணம் இருந்தது.

நடிகர் விஜய்யை புகழ்ந்து பிரதமர் மோடி பாடுவது போன்ற வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய். தளபதி என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தான் இன்றைய நிலையில் தமிழ் திரையுலகின் நம்பர் 1 நடிகராக வலம் வருகிறார். விஜய் கடைசியாக கடந்தாண்டு ரிலீசான லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதனிடையே கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக நடிகர் விஜய் அறிவித்தார். நீண்ட காலமாக அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் செயல்பாடுகள் அதை உறுதி செய்யும் வண்ணம் இருந்தது. இதனிடையே விஜய் கட்சி ஆரம்பித்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றது. 

விஜய் தன் கட்சி தொடர்பான அறிக்கையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை என தெளிவாக சொல்லிவிட்டார். மேலும் 2026 தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும் கூறியுள்ளார். அதேசமயம் இன்னும் ஒரு படம் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவேன்,முழுநேர மக்கள் பணியில் ஈடுபடுவேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

விஜய்யின் அரசியல் வருகை ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. அதேநேரம் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் முழு வீச்சில் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் உறுப்பினர்களை சேர்க்க தீவிரமாக பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதே இலக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் AI தொழில்நுட்பத்தில் பிரதமர் மோடி நடிகர் விஜய்யை புகழ்ந்து பாடும் வீடியோ கடந்த சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதில் “தளபதி படம் வந்தால் அரசாங்கம் பயப்படும்.. தளபதி வந்தால் தான் தமிழ்நாடே உருப்புடும்.. எல்லாருக்கும் அதிர்ச்சி.. அண்ணனோட வளர்ச்சி” உள்ளிட்ட வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

உண்மையில் இந்த பாடல் 2019 ஆம் ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மெட்ராஸ் மிரன் பாடல் வரிகளில் கானா சுதாகர் பாடிய “MAN OF THE MASS” என்ற பாட்டு தான் மோடி குரலில் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை

தலைப்பு செய்திகள்

JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?
JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?
"யாரிடமும் அனுமதிவாங்க தேவையில்லை.." துருவ் விக்ரமுடன் காதல் முறிவா? அனுபமா பதிவால் பரபரப்பு
AK 64 அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
AK 64 அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
Kamal Haasan: அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள்.. தகுதியான அங்கீகாரம்.. கமல்ஹாசன் பெருமிதம்!
அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள்.. தகுதியான அங்கீகாரம்.. கமல்ஹாசன் பெருமிதம்!

வீடியோ

300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு
காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
DMK MLA Markandeyan : திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
Embed widget