Saindhavi: கெட்டது மட்டும் பண்ணிடக்கூடாது.. சைந்தவியை பாதித்த தோழியின் மரணம்.. என்ன ஆச்சு?
கடந்த 2005-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “அண்டங்காக்கா கொண்டக்காரி” படம் மூலம் பாடகியாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சைந்தவி.
பிரபல பின்னணி பாடகி சைந்தவி தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத துயர சம்பவம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி காணலாம்.
கடந்த 2005 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “அண்டங்காக்கா கொண்டக்காரி” படம் மூலம் பாடகியாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சைந்தவி. தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், டி இமான், ஸ்ரீகாந்த் தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், மணிஷர்மா, யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார், ஹிப் ஹாப் தமிழா, சாம் சி.எஸ். என முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் 60க்கும் மேற்பட்ட பாடல்களை சைந்தவி பாடியுள்ளார்.
சின்னத்திரையில் அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, வள்ளி, கனா, தாலாட்டு, மீனா, சிங்கப்பெண்ணே, லட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களின் டைட்டில் பாடல்களை சைந்தவி பாடியுள்ளார், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி பாடகியாக திகழ்கிறார். சைந்தவி - ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து பாடிய டூயட் பாடல்கள் அனைத்து ரசிகர்களின் பேவரைட் ஆக அமைந்தது. இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு சைந்தவி திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இப்படியான நிலையில் சைந்தவி பழைய நேர்காணல் ஒன்றில் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அதில் பேசும் அவர், “நான் காலேஜ் இறுதியாண்டு படிச்சிட்டு இருக்கும்போது என்னோட ஒன்றாக படித்த கோமல் என்ற தோழி விபத்தில் இறந்து விட்டார். முதல் நாள் வரை என்னுடன் நன்றாக பேசியவர், அடுத்த நாள் இல்லை என்றபோது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சின்ன வயசுல நடந்த சம்பவம் என்னை ரொம்ப பாதித்தது. அப்போது தான் ஒரு எண்ணம் தோன்றியது. யாருக்கு நல்லது பண்ணுகிறோமோ இல்லையோ கெட்டது மட்டும் பண்ணிவிடக்கூடாது என நினைத்தேன்.
கோமலின் உடல் வீட்டில் வைத்திருக்கும்போது நான் சென்று பார்த்தேன். அந்த ஒரு காட்சியை என்னால் மறக்க முடியாது. தூக்கத்தில் இருந்து பல நாட்கள் எழுந்து அவளை நினைத்து அழுதுள்ளேன். வேறு யாருக்கும் இப்படி நான் அழுதது இல்லை. அந்த விபத்து என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Prashanth: அப்பவே அவர் பெரிய ஹீரோ தான்.. நடிகர் பிரஷாந்தை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் ஹரி!