Prashanth: அப்பவே அவர் பெரிய ஹீரோ தான்.. நடிகர் பிரஷாந்தை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் ஹரி!
Director Hari on Prashanth : நடிகர் பிரஷாந்த் சினிமா ட்ராக் மாறியது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி இருந்தார் இயக்குநர் ஹரி.
தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் மசாலா திரைப்படங்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் ஹரி. கே.பாலச்சந்தர், சரண், அமீர் ஜான் போன்ற பிரபலமான இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக முன்னேறியவர். 2002ம் ஆண்டு வெளியான 'தமிழ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் படம் மூலம் கால் தடம் பதித்தார். வலுவான திரைக்கதை இருத்தால் படம் நிச்சயமாக ஜெயிக்கும் என்ற கேட்டகரியில் வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. அதைத்தொடர்ந்து சாமி, அய்யா, அருள், சேவல், சிங்கம், வேங்கை, பூஜை உள்ளிட்ட ஏராளமான மசாலா படங்கள் மூலம் முன்னை இயக்குநர்களின் பட்டியலில் சேர்ந்தார்.
ஹரி இயக்கிய முதல் படத்தின் ஹீரோ டாப் ஸ்டார் பிரஷாந்த். அந்த சமயத்தில் அவர் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக இருந்தவர். அந்த சமயத்திலேயே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மிக பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வரவேண்டியவர். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவரின் ட்ராக் திடீரென ஏதோ ஒரு கட்டத்தில் மாறி ஒரு பெரிய பிரேக் வந்தது. நடிகர் பிரஷாந்த் ட்ராக் மாறியது குறித்து சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார் இயக்குநர் ஹரி.
தமிழ் படத்திற்கு பிறகும் அவர் பல படங்களில் நடித்து வந்தார். 'வைகாசி பொறந்தாச்சு' படம் எப்போது வெளிவந்ததோ அந்த சமயத்தில் இருந்தே அவர் பெரிய ஹீரோ தான். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு மிக பெரிய ஹீரோவாக ரவுண்டு வந்த பிறகு தான் அவராகவே ஏதோ சில பாலிசி எடுத்து இது போன்ற படங்கள் பண்ண வேண்டாம் என முடிவு எடுத்து இருக்கலாம். அவரின் அந்த பிரேக்குக்கு என்ன காரணம் என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. இருந்தாலும் அவர் பெரிய ஹீரோ தான்.
எவ்வளவு பெரிய பெரிய படங்களில் எல்லாம் நடித்துள்ளார். வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் படங்கள் எல்லாம் எத்தனை பெரிய ஹிட் படங்கள். அவ்வளவு அழகா ஸ்க்ரீனில் சார்மிங்கா இருப்பார். ஜீன்ஸ் படத்தில் இரண்டை கதாபாத்திரத்தில் மிகவும் ஆளுமையாக நடித்திருப்பார். ஆறு டூயட் பாடல்களிலும் அவ்வளவு அழகாக நடித்து இருப்பார். அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம். தமிழ் படத்திலும் மிகவும் எதார்த்தமான ஒரு ஹீரோவாக நடித்திருந்தார். முதல் முறையாக மீசை வைத்து நடித்தார் என நினைக்கிறன். ஒரிஜினல் மீசை வைத்து வித்தியாசமாக இருந்தது. அவரின் நடிப்பு தமிழ் படத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது என பேசி இருந்தார் இயக்குநர் ஹரி.