மேலும் அறிய

Pattukottai Periyappa: ‛விசு வந்தாலே போதும்...’ 28 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‛பட்டுக்கோட்டை பெரியப்பா’

பிரபலமான நடிகர்களுக்காக காத்து இருக்காமல் வளரும் நடிகர்கள் பலருக்கும் தனது படங்கள் மூலம் வாய்ப்பளித்து தனது ஆளுமையை தமிழ் சினிமாவில் விரிவுபடுத்தியவர் இயக்குனர் விசு.

வசனங்கள், வார்த்தை ஜாலங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்தவர்கள் பலர். சமூகம் சார்ந்த வசனகர்த்தாக்கள் பலர் இருந்தாலும் நடுத்தர குடும்பங்களில் உள்ள பிரச்சனை, உறவு சிக்கல்கள், உணர்வுகள் இவை அனைத்தையும் தனது வித்தியாசமான குரல் மொழியால், நேர்த்தியான வசன உச்சரிப்பால், யதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் பெற்றவர் விசு.  அவரே இயக்கி நடித்த பல தனித்துவமான படங்கள் மூலம் தனி சிம்மாசனத்தில் அமர்ந்தவர். அவருக்கு நிகர் அவர் மட்டுமே. யாராலும் ஈடு செய்ய முடியாத ஒப்பற்ற கலைஞர் இயக்குனர் விசு. 

Pattukottai Periyappa: ‛விசு வந்தாலே போதும்...’ 28 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‛பட்டுக்கோட்டை பெரியப்பா’

புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வள்ளல்:

அந்த வகையில் 1994ம் ஆண்டு இயக்குனர் விசு இயக்கத்தில் ஆனந்த் பாபு, வினோதினி, மோகினி, டெல்லி கணேஷ், லட்சுமி, எஸ்.எஸ். சந்திரன், விவேக், ஒய். விஜயா, மு. வரலட்சுமி, டி. வி. வரதராஜன், குமரிமுத்து உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் "பட்டுக்கோட்டை பெரியப்பா". இப்படம் வெளியாகி இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இயக்குனர் விசு இன்று நம்மோடு இல்லை என்றாலும் அவரின் அற்புதமான படைப்புகள் மூலம் நமது நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தில் என்றுமே நிலைத்து நிற்பார்.  பிரபலமான நடிகர்களுக்காக காத்து இருக்காமல் வளரும் நடிகர்கள் பலருக்கும் தனது படங்கள் மூலம் வாய்ப்பளித்து தனது ஆளுமையை தமிழ் சினிமாவில் விரிவுபடுத்தியவர். இயக்குனர் விசுவின் அனைத்து படங்களிலும் நாடக பாணி தென்படும். அனைத்து கதாபாத்திரங்களையும் உள்வாங்க கூடியவர். அது அவரின் பலவீனமாக இருந்தாலும் அவரின் பலமும் அதே தான். அவரின் பல படங்கள் வசூலை வாரி குவித்தது. குறிப்பாக சம்சாரம் அது மின்சரம் திரைப்படம் வெள்ளிவிழா கண்ட ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். 

பட்டுக்கோட்டை பெரியப்பா செய்த காரியம் :

உறவு முறைகளை பெயராக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வந்த "பட்டுக்கோட்டை பெரியப்பா" திரைப்படமும் ஒரு குடும்பத்தை சுற்றி நடக்கும் கதையே. அதிக வரதட்சணைக்கு ஆசைப்படும் பேராசை கொண்ட ஒரு மாமியாரால் நின்று போகிறது ஒரு பெண்ணின் திருமணம். அதை சரி செய்வதற்காக ஊரில் இருந்து வருகிறார் மணமகனின் பெரியப்பா விசு. பணம் முக்கியமா அல்லது பாசமும் உறவும் முக்கியமா என்பதை  நெற்றியில் அடித்தாற்போல் மாமியாருக்கு புரிய வைக்கிறார் பட்டுக்கோட்டை பெரியப்பா. வரதட்சணையால் நின்று போன திருமணம் மீண்டும் நடைபெற்றதா? இல்லையா?  அதற்கு பெரியப்பா எடுத்த முயற்சி என்ன என்பது தான் படத்தின் கதைக்களம். பொதுவாகவே குடும்பம் சம்பந்தமான படங்களை எடுக்கும் இயக்குனர் விசு படங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அந்த வகையில் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார் தேனிசை தென்றல் தேவா.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget