மேலும் அறிய

Pathu Thala: சிம்புவின் பத்து தல ரிலீஸ் எப்போது..? வருட இறுதியில் அப்டேட் கொடுத்த படக்குழு..!

Pathu Thala Release Date: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பாக படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பத்து தல:

மாநாடு திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் இடையே சுமாரான வரவேற்பையே பெற்றது. அதைதொடர்ந்து எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தமாகமால் இருந்த சிம்பு, சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது.

இதில், சிம்பு ஏ.ஜி.ஆர். என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார். அவர்களோடு பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், நடப்பாண்டிலேயே இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தாமதமானது.

அப்டேட் கொடுத்த படக்குழு:

இந்நிலையில், பத்து தல படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், பத்து தல புத்தாண்டை கொண்டாட தயாரா?. ஆம், பத்து தல படத்தின் வெளியீட்டு தேதியை நாளை காலை 11 மணிக்கு வெளியிட நாங்கள் தயாராக உள்ளோம் என, தயாரிப்பு நிறுவனமாக ஸ்டூடியோ கிரீன் தெரிவித்துள்ளது.

படத்தின் கதை:

சிம்பு நடித்துள்ள பத்து தல, கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில், சிம்பு ஏ.ஜி.ஆர். என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார்.  நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலீஸ் பற்றிய கதை தான் இந்த படம். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐதராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது. அண்மையில் கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் படத்தின்  டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக ட்விட்டரில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கிருஷ்ணா ஏற்கனவே சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
Vidamuyarchi : விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா ? வராதா ? குழப்பத்தில் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா ? வராதா ? குழப்பத்தில் ரசிகர்கள்
Thiruppavai 16: எதிர்மறையாக பேசாதீர்கள்..நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்: உணர்த்தும் ஆண்டாள்
Thiruppavai 16: எதிர்மறையாக பேசாதீர்கள்..நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்: உணர்த்தும் ஆண்டாள்
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Embed widget