மேலும் அறிய

Pathaan Box Office Collection : பாலிவுட் சினிமாவை தூக்கி நிறுத்திய பதான்... முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? 

பதான் திரைப்படம் இந்தி பாக்ஸ் ஆபீஸில் 50 - 51 கோடி வசூல் செய்து ஒரு அற்புதமான ஓப்பனிங் பெற்றுள்ளது. இதன்மூலம் விடுமுறை அல்லாத தினத்தில் வெளியான பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்றாலே ஹிந்தி திரைப்படங்கள் தான் என ஆதிக்கம் செலுத்தி வந்த வரலாற்றை மாற்றியது எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம். 

இந்தி திரைப்படங்களுக்கு இணையாக தென்னிந்திய திரைப்படங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை செய்ய முடியும் என்பதை நிரூபித்தது தெலுங்கு திரையுலகில் வெளியான பாகுபலி மற்றும் கன்னட திரையுலகில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம். அதனை தொடர்ந்து பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படமும் வர்த்தக ரீதியாக அதிகமாக வசூலை பெற்று தென்னிந்திய சினிமாவை சர்வதேச அளவிற்கு எடுத்து சென்றது. 

 

Pathaan Box Office Collection : பாலிவுட் சினிமாவை தூக்கி நிறுத்திய பதான்... முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? 

சர்ச்சைகளை சிக்ஸர் அடித்த பதான் :

அந்த வகையில் பாலிவுட் சினிமா கடந்த ஆண்டு தொடர்ந்து சரிவை சந்தித்தது. வசூல் ரீதியாக  பெரிய அளவில் பாதிக்கப்பட்ட இந்தி சினிமா தனது முழு நம்பிக்கையையும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'பதான்' படத்தின் மீது வைத்தது. மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது தயாரிப்பாக நடிகர் ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் ஜனவரி 25ம் தேதி வெளியான திரைப்படம் 'பதான்'.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியது. படத்தை பாய்காட் செய்யும் அளவிற்கு பலதரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் படத்தின் வசூலை வெகுவாக பாதிக்கும்  என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேச்சு  எழுந்தது. ஆனால் சர்ச்சைகளை எல்லாம் சிக்ஸர் அடிக்கும் வகையில் முன்பதிவிலேயே பட்டையை கிளப்பியது பதான் படம். 

 

 

அதிரடியான முன்பதிவு :

இந்திய அளவில் பதான் படம் 5000 ஸ்க்ரீன்களில் ஜனவரி 25ம் தேதி வெளியானது. முதல் நாள் காட்சிகளுக்கு மட்டுமே 5.21 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்றது. இதனால் அதிக அளவிலான முன்பதிவு செய்யப்பட்ட முதல் இந்தி படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதனால் படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்க போகிறது என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ‘கேஜிஎஃப் 2’ படத்தின் முந்தைய சாதனையை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் பதான் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

 

அற்புதமான ஓப்பனிங் :

2019ம் ஆண்டு வெளியான 'வார்' திரைப்படம் 50 கோடியும், 2022ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் 52 கோடியையும் வசூல் செய்தது. அந்த வகையில் இந்தி பாக்ஸ் ஆபிஸில் 51 கோடி வசூல் செய்ததோடு  பதான் திரைப்படம் சர்வதேச அளவில் முதல் நாள் மட்டுமே 100 கோடி வசூல் செய்து ஒரு அற்புதமான ஓப்பனிங் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை அல்லாத தினத்தில் வெளியாகி 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி 2வின்  இந்தி வெர்ஷன் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது பதான்.    

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன்: "மதுரை மாப்பிள்ளை என்பதில் பெருமை!" மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிவா !
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Embed widget