(Source: ECI/ABP News/ABP Majha)
‛மீன்ல விரால் நல்லது... மீம்ஸ் viral ஆவது நல்லது...’ சேட்ட புடிச்ச ஆளு சார் இவரு!
மீம்ஸிற்காக கண்டெண்ட் தேடும் மீம்ஸ் வேட்டையர்களுக்கு, பழுவேட்டரையரின் சூப்பர் பதில் சிக்கியது. அதைவைத்து சேட்ட புடிச்ச ஆளு சேர் என மீம்ஸ் போட்டனர்.
எங்கும் பொன்னியின் செல்வன் எதிலும் பொன்னியின் செல்வன் என்பதற்கு ஏற்ப, சமூக வலைதளங்களில் எங்கும் எப்போதும் ரீல் சோழர்களின் போட்டோக்களும் அப்டேட்களும் நிறைந்து காணப்படுகிறது.
View this post on Instagram
இன்று காலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நடிகர் பார்த்திபன் வெளியிட்டிருந்தார். அந்த போட்டோவில், ஐஸ்வர்யா, சரத்குமாருடன் பார்த்திபன் இருந்தார். அந்த போஸ்டுடன், ஸ்வீட் ஸ்டாலே பணியாரம் சாப்பிடுகிறதே எனும் கவிதை போல், “ ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்.அழகென நான் காண்பது…பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன் தயாராகிவிட்டு,பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்.” ஐஸ்வர்யாவுக்கு கவிதை எழுதியிருந்தார்.
கமெண்ட் பாக்ஸில் பல கருத்துக்கள் குவிந்து வர, எனக்கு ஒரு ஸ்மால் ஹாய் சொல்லுங்க என கேட்டார். அதற்கு, பார்த்திபன் பதலளிக்கும் படி ஸ்மால் ஹாய் என சொன்னார்.
View this post on Instagram
மீம்ஸிற்காக கண்டெண்ட் தேடும் மீம்ஸ் வேட்டையர்களுக்கு, பழுவேட்டரையரின் சூப்பர் பதில் சிக்கியது. அதைவைத்து சேட்ட புடிச்ச ஆளு சேர் என மீம்ஸ் போட்டனர். அதற்கு, பார்த்திபன் “மீன்ல விரால் நல்லது, மீம்ஸ் viral ஆவது நல்லது! (எடிட்டர் ஹரீஷ் அனுப்பியதால் வந்த தத்துவமிது)
இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும் !” என்று பதிலளித்தார்.
மேலும் படிக்க : Katrina Kaif: மதுரை உசிலம்பட்டியில் கத்ரீனா கைஃப்... அரபிக்குத்துக்கு ஆட்டம் போட்டது ஏன்?
PS 1 Bookings: ‛ரிலீஸிற்கு முன்பே வசூல் வேட்டை’ பொன்னியின் செல்வன் 2.5 லட்சம் டிக்கெட் விற்பனை!