PS 1 Bookings: ‛ரிலீஸிற்கு முன்பே வசூல் வேட்டை’ பொன்னியின் செல்வன் 2.5 லட்சம் டிக்கெட் விற்பனை!
பொன்னியின் செல்வன் படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில், டிக்கெட் முன்பதீவிடு சூடு பிடித்துள்ளது
பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் ரிசர்வேஷன், சனிக்கிழமை இரவில் துவங்கிய நிலையில், இதுவரை 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. இதனால், 4.50 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. இதுவரை 225 சினிமா அரங்குகளில் மட்டுமே, பொன்னியின் செல்வன் 1 படத்திற்கான டிக்கெட் ரிசர்வேஷன் துவங்கியுள்ளது. மீதம் உள்ள பெரிய அரங்குகளில், இன்றும் நாளையும் டிக்கெட் புக்கிங் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் இப்படத்திற்கான டிக்கெட் பதிவீடு மும்முராக நடைபெற்று வருகிறது.
View this post on Instagram
பீவிஆர், ஐநாக்ஸ் போன்ற பெரிய தியேட்டர்களில் முன்பதிவு துவங்கினால், சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் கூடுதல் வசூல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பாக, விக்ரம் பீஸ்ட் மற்றும் வலிமை போன்ற படங்கள் முன்பதிவிலேயே நல்ல வசூலை பெற்றது. இந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் படமும் இணைந்துள்ளது.
பொன்னியின் செல்வன் படமானது, விஜய் நடித்த பீஸ்ட் படத்தையோ அல்லது அஜித் நடித்த வலிமை படத்தையோ முதல் நாள் வசூல் ரீதியாக தோற்கடிக்க, குறைந்த வாய்ப்புகளே உள்ளது. ஏனென்றால், அந்த இரு படங்களின் நடிகர்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருந்ததால், முதல் நாளிலே நல்ல வசூலை புரிந்தது.
View this post on Instagram
முதல் நாள் வசூலை தோற்கடிக்காவிட்டாலும், வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இப்படமானது நல்ல வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. விக்ரம் படமானது, முதல் நாளில் 22 கோடி ரூபாயை வசூல் செய்தது. இப்படம் ஸ்பெஷல் விடுமுறை நாளில் வெளியாகவில்லை . அதுவும் இது அஜித் விஜய் படமும் இல்லை. ஆனால், விக்ரம் முன்பதிவியில் 15 கோடி வசூல் செய்திருப்பது இன்று வரை ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
Hello DELHI ✨ We're Here! 🤩 #PS1 🗡️ #PonniyinSelvan1 🗡️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @Karthi_Offl #AishwaryaRaiBachchan @trishtrashers @actor_jayamravi @PenMovies pic.twitter.com/g7OYVrYU6g
— Lyca Productions (@LycaProductions) September 26, 2022
இப்போது ப்ரொமோனுக்காக, படக்குழுவினர் திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்றுள்ள நிலையில், தற்போது டெல்லியில் கால் தடம் பதித்துள்ளனர்.