![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Natchathiram Nagargiradhu Trailer: நாளை வெளியாகிறது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் !
”நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது என்று பா ரஞ்சித் அவரின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
![Natchathiram Nagargiradhu Trailer: நாளை வெளியாகிறது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் ! Pa Ranjith Natchathiram Nagargiradhu Trailer Release Date Tomorrow August 19th Stay Tuned Natchathiram Nagargiradhu Trailer: நாளை வெளியாகிறது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/951ef5148f2e19ee5ade5cc3e46aadbb1660823993283501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்ஷன் படத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக அறிவித்தார். இதன்படி, நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற காதல் படத்தை தற்போது சத்தமே இல்லாமல் இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
The trailer of #NatchathiramNagargiradhu is releasing tomorrow!
— pa.ranjith (@beemji) August 18, 2022
Stay Tuned!
A @tenmamakesmusic musical@officialneelam @vigsun @Manojjahson @YaazhiFilms_ @thinkmusicindia pic.twitter.com/2B0I36Uu6s
இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு பெண் தலைவிரிகோலமாய் இருப்பதும், அதில் கதாபாத்திரங்கள் இருப்பதுபோன்றும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக தென்மா பணியாற்றியுள்ளார். ரஞ்சித்தின் இசை கூட்டணியான சந்தோஷ் நாராயணனை இப்படத்தில் பணியாற்றவில்லை என்பது ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.
View this post on Instagram
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா படத்திற்கு முன்பு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றையே படமாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. சார்பட்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பிற்கு பிறகு மீண்டும் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக காதல் படத்தை எடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)