Pa. Ranjith: 'வாழை' கம்ஃபோர்ட் ஜோனில் எடுக்கப்பட்டது தான்; உங்களின் பாராட்டுக்காக அல்ல - பா. ரஞ்சித் ஆதங்கம்
Pa. Ranjith : 'வாழை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் இயக்குநர் பா. ரஞ்சித்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில் "ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய கொடூரத்தை நீங்கள் நிகழ்த்துக்கறீர்கள். 'பரியேறும் பெருமாள்' தான் நல்ல படம் அப்படினா கர்ணன், மாமன்னன் படம் எல்லாம் என்ன மொக்க படமா? பரியேறும் பெருமாள் தான் சூப்பரான படம் அதுக்கு அப்புறம் எனக்கு வாழை தான் பிடிக்கும்.
கர்ணன் திரும்பி அடிக்குறான் அதனால உங்களுக்கு பிடிக்கல. அவன் ஏன் திருப்பி அடிக்குறான். அங்க என்ன பிரச்சினை நடக்குது? அவன் ஏன் குரல் கொடுக்குறான்? அதற்கான சூழலை இந்த சமூகம் அவனுக்கு உருவாக்கி கொடுத்து இருக்கு.
PaRanjith claims some accusation of Audience that, "People liked PariyerumPerumal because the hero didn't hit back, while they didn't liked Karnan & Maamannan because the hero hits back enemy"
— AmuthaBharathi (@CinemaWithAB) August 20, 2024
Do You Agree❓🙄pic.twitter.com/8dhEmOIcz9
இந்த கேள்விக்கான பதிலை உங்களிடம் நீங்கள் கேட்டு கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான, துன்புறுத்தாத வகையில் நான் கதையை சொல்லும் போது அதை சூப்பர், நல்லா இருக்கு அப்படினு உங்களுக்கு ஏற்ற வகையில் தான் நாங்கள் படம் எடுக்கணுமா? அந்த கம்பர்ட் ஜோனை உடைத்து தான் கர்ணன், மாமன்னன் படங்களை அவன் எடுத்தான். 'வாழை' படத்தை எடுத்து இருப்பது கூட அவனுக்கு பிடித்த மாதிரி தானே தவிர நீங்க பரியேறும் பெருமாள் படம் மாதிரி கொண்டாடணும் என்று எல்லாம் எண்ணி எடுக்கவில்லை என தனது ஆதங்கத்தை கொண்டி இருந்தார் பா. ரஞ்சித்.
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.