OTT Release : அசுர் 2 முதல் விஜய்சேதுபதி நடித்துள்ள மும்பைக்கர் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஸ்கூப் முதல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெப் சீரிஸ்களில் ஒன்றான அசுர் 2 இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
இந்த வாரம் டிஜிட்டல் தளங்களில் பல வெப் சீரிஸ் படங்கள் வெளியாக உள்ளன. நெட்ப்ளிக்ஸ், ஜீ 5 , அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் ஏராளமான புதிய தொடர்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஸ்கூப் முதல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெப் சீரிஸ்களில் ஒன்றான அசுர் 2 வரை அனைவரையும் கவரும் வகையில் ஏராளமான ஸ்வாரஸ்யங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளன. எனவே இந்த வார இறுதியில் உங்களுக்கு பிடித்த படம் எந்தெந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அசுர் 2 :
ஓனி சென் இயக்கத்தில் புகழ்பெற்ற கிரைம் இந்தி த்ரில்லர் தொடரான அசுரின் இரண்டாவது சீசன் வெளியாக உள்ளது. முதல் சீசனில் நடித்த பாருன் சோப்தி, அர்ஷத் வார்சி, அமே வாக் மற்றும் ரித்தி டோக்ரா உள்ளிட்டோர் இந்த சீசனிலும் நடித்துள்ளனர். கட்டுக்கதைகள் மற்றும் மதத்தின் பின்னணியில் தொடர் கொலைகளை செய்யும் ஒரு கொலைகாரனின் கதையை கருவாக வைத்து உருவாகியுள்ளது. முதல் சீசன் ஒரு சஸ்பென்ஸுடன் முடிக்கப்பட்டு இருந்தது. இந்த தொடர் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஜூன் 1ம் தேதி வெளியாகியுள்ளது.
ஸ்கூப் :
ஒரு குற்றவியல் சார்ந்த கதை இந்தி தொடர்தான் ஸ்கூப். குற்ற நிருபர் ஜோதிர்மாய் டேயின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக காவல்துறை மற்றும் விசாரணை நிறுவனங்களால் அவர் எப்படிக் கட்டப்பட்டார் என்பதைச் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எடுத்து சொல்லும் கதை தான் ஸ்கூப். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.
A Beautiful Life :
ஒரு இளம் மீனவருக்குள் மறைந்திருக்கும் திறமையை இசையமைப்பாளர் ஒருவர் வெளிகொண்டுவருகிறார். அவர் நட்சத்திரமாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்வாரா என்ற இந்த கதையில் கிறிஸ்டோபர், இங்கா இப்ஸ்டோட்டர் லில்லியாஸ் மற்றும் கிறிஸ்டின் அல்பெக் போர்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெஹ்தி அவாஸ் இயக்கியுள்ள இந்த ஆங்கில வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 1ம் தேதி வெளியாகியுள்ளது.
பவர் புக் II: கோஸ்ட் சீசன் 3 :
கர்ட்னி ஏ. கெம்ப் இயக்கியுள்ள இந்த ஆங்கில இணைய தொடர் ஜூன் 2ம் தேதி லயன்ஸ்கேட் பிளே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஸ்கூல் ஆஃப் லைஸ்:
ஸ்கூல் ஆஃப் லைஸ் என்ற புதிய ஹிந்தி வெப் சீரிஸ் காணாமல் போன ஒரு பள்ளிச் சிறுவனைப் பற்றிய கதையையும் அவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பற்றிய கதை. சிறுவன் காணாமல் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதற்காக மாணவர்களிடம் பேசும் ஆலோசகராக நடித்துள்ளார் நிம்ரத் கவுர். அவினாஷ் அருண் இயக்கியுள்ள இந்த தொடர் ஜூன் 2ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
ஹத்யபுரி :
பெங்காலி த்ரில்லர் ஹத்யபுரி ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூன் 2ம் தேதி வெளியாகிறது. இந்திரன் சென்குப்தா, அபிஜித் குஹா, பரண் பந்தோபாத்யாய், சுப்ரியோ தத்தா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் இந்தி மற்றும் பெங்காலியில் வெளியாக உள்ளது.
மேனிஃபெஸ்ட் சீசன் 4 பார்ட் 2 :
நெட்பிளிக்ஸ் முன்பு ரத்து செய்த மேனிஃபெஸ்ட் தொடரை கடந்த சீசனுக்காக புதுப்பித்து. ஜமைக்காவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு பறக்கும் போது கடுமையான கொந்தளிப்பை அனுபவிக்கும் மான்டேகோ ஏர் 828ல் இருந்த பயணிகள் தரையிறங்கும் போது தான், ஐந்தரை ஆண்டுகள் உண்மையில் கடந்துவிட்டன என்பதை தெரிந்து கொள்கிறார்கள். ஜூன் 2ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது இந்த தொடர்.
மும்பைக்கர் :
மும்பைகார் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, விஜய் சேதுபதி, ரன்வீர் ஷோரே, சச்சின் கெடேகர், தன்யா மணிக்தலா மற்றும் சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இது தமிழில் வெளியான பிளாக் பஸ்டர் திரில்லர் திரைப்படமான மாநகரம் படத்தின் ரீ மேக் படமாகும். குழந்தை கடத்தல் எப்படி தவறாக நடக்கிறது மற்றும் அதைத் தொடர்ந்து வரும் அனைத்து விஷயங்களையும் வெளிக்காட்டுகிறது. சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படம் இந்தி மற்றும் தமிழில் ஜூன் 2ம் தேதி ஜிவ் சினிமாவில் வெளியாக உள்ளது.
மேலும் இந்தியன் சம்மர்ஸ் சீசன் 2 தொடர் MX பிளேயர் ஓடிடி தளத்திலும், அனந்த் அனாதி வத்நகர், டிஸ்கவரி பிளஸ் ஓடிடி தளத்திலும் இந்தியில் ஜூன் 7ம் தேதியும் வெளியாகிறது.