OTT Release: இந்த வாரம் ஓடிடியில் இவைதான்.. ஜெயிலர் முதல் குங் ஃபூ பாண்டா வரை டாப் ஹிட்ஸ் படங்கள்!
ஜெயிலர் முதல் பாபா பிளாக் ஷீப் வரை ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட் பட்டியலை இங்கு காணலாம்.
இந்த வாரம் பான் இந்தியா படமாக ஜவான் ரிலீசாக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக ஓடிடி தளத்தில் ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் ஜவான் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. பிரமாண்டமும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளையும் கொண்ட ஜவான் நாளை மறுநாள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. படத்தின் ரிலீசை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பிரீ ரிலீஸ் விழாவில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, அனிருத் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று ஷாருக்கானிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை மறுநாள் படம் ரிலீசாவதை ஒட்டி, திருப்பதி கோவிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தனர்.
Jailer: ஜாருக்கானின் ஜவான் படம் ரிலீசாக உள்ள தருணத்தில் ஓடிடி தளத்தில் ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் படமான ஜெயிலர் வசூலில் ரூ.600 கோடியையும் தாண்டி சாதனை படைத்து வருகிறது. திரையில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அமேசான் பிரைமில் வரும் 7ம் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. திரையில் சென்று ஜெயிலர் படத்தை பார்க்க முடியாதவர்கள் பிரைமில் பார்த்து ரசிக்கலாம்.
Baba Black Sheep: ராஜ்மோகன் இயக்கத்தில் நகைச்சுவை படமாக உருவான பாபா பிளாக் ஷீப் படம் கடந்த ஜூலை மாதம் திரையில் வெளியானது. ஆர்.ஹே. விக்னேஷ், அம்மு அபிராமி, நரேந்திர பிரசாத் என பலர் நடித்துள்ள இந்த படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.
Love: ஆர். பி. பாலா இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் நடித்திருக்கும் ரொமாண்டிக் த்ரில்லர் படமான Love ஆஹா ஓடிடி தளத்தில் வரும் 8ம் தேதி வெளியாக உள்ளது. காதல், திருமணம், கொலை என அடுத்தடுத்த திருப்பங்கள் கொண்ட த்ரில்லர் படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம்.
DD Returns: சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பேய் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது. காமெடி கலந்த பேய் திரைப்படத்தை காண விரும்புவோர், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை பார்த்து ரசிக்கலாம்.
Kala: காலா ( மலையாள படம்): மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்த காலா படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் வெற்றிப்பெற்றது. சுரேஷ் மூர், லால், திவ்யா பிள்ளை என பலர் நடித்துள்ள இந்த படம் உளவியல் த்ரில்லர் கதையை கொண்டது. விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் கொண்ட இந்த படம் வரும் 15ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.
Haddi: அரசியலிலும், நிழல் உலகத்திலும் கலக்கும் திருநங்கை என்ற கதையை கொண்ட ஹத்தி திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் 7ம் தேதி ரிலீசாக உள்ளது. அனுராக் காஷ்யப், இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், சவுரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ் குமார், விபின் சர்மா என பலர் நடித்துள்ள இந்த படத்தில் நவாசுதீன் சித்திக் திருநங்கையாக நடித்துள்ளார்.
Kung Fu Panda: The Dragon Knight: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குங்ஃபூ பாண்டா தி ட்ராகன் நைட் சீசன் 3 நெட்பிளிக்சில் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இதேபோன்று வரும் 6ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தி லிட்டில் மெர்மெய்டு (The Little Mermaid) மற்றும் ஐ எம் குரூட் சீசன் 2 (I Am Groot Season 2) உள்ளிட்ட சுவாரசிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.