எதிர்பார்ப்பை கிளப்பிய 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! அப்படி என்ன ஸ்பெஷல்?
ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள 'வடக்கன்' பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜெய்தீப் சிங் மற்றும் பவ்யா நிதி ஷர்மா ஆஃப்பீட் ஸ்டுடியோஸ் சார்பில் உருவாகி உள்ள மலையாள படமான 'வடக்கன்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
த்ரில்லராக உருவாகியுள்ள வடக்கன் திரைப்படம்:
சஜீத் ஏ இயக்கி இருக்கும் இந்த படம் பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புடன் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் வடிவில் திராவிட புராணங்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கன் படத்திற்கு கதை உன்னி ஆர். கிஷோர் எழுதியுள்ளார் மற்றும் ஸ்ருதி மேனன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அகாடமி விருது பெற்ற ரெசூல் பூக்குட்டி, ஜப்பானிய ஒளிப்பதிவாளர் கெய்கோ நகஹாரா மற்றும் தேசிய விருது பெற்ற பிஜிபால் உள்ளிட்ட முக்கிய குழுவினரையும் 'வடக்கன்' படம் கொண்டுள்ளது.
'வடக்கன்' ஒரு புதுவித சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க உள்ளது. அமானுஷ்ய மற்றும் த்ரில்லர் நிறைந்த திரைக்கதையுடன் தனித்துவமாக எடுக்கப்பட்டுள்ளது. அகாடமி விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, 'வடக்கன்' படத்திற்குள் தனித்துவமான ஒரு ஒலி வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பிஜிபால் வடக்கன் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஷெல்லி, ராப்பர் MC கூப்பர், ஹரி நாராயணன் பாடல் எழுதி உள்ளனர்.
உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:
வடக்கன் படத்தில் கிஷோர் மற்றும் ஸ்ருதி மேனன் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளர் கெய்கோ நகஹாராவால் திராவிட புனைவுகளின் மாய உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். தனது அசாதாரணத் திறமையால் மேரி கோம் மற்றும் சகுந்தலா தேவி போன்ற படங்களுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளார். இவரது புதுமையான அணுகுமுறை சவாலான மற்றும் யதார்த்தமான காட்சிகள் எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இது படத்தின் தரத்தையும் உயர்த்துகிறது.
பார்வையாளர்களை ஒரு புதுவித பயணத்தில் அழைத்துச் செல்லும் இந்தப் படம் கேரளா, பின்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், 'வடக்கன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இதையும் படிக்க: Cinema Headlines: மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா! விஷாலுக்கு வந்த அரசியல் அழைப்பு - சினிமா ரவுண்ட் அப்