Bipasha Basu: மாலத்தீவில் மஜாவாக எடுத்த புகைப்படங்கள்: பிபாஷா பாசுவுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களுக்கு கண்டனங்கள் குவிந்தது. தொடந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்த இந்தியர்கள் பலரும் அந்த பயணத்தை ரத்து செய்தனர்.
மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என பிரபலங்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், நடிகை பிபாஷா பாசுவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2 ஆம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர், ‘லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் வியப்படைவதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த பயணத்தில் 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக எவ்வாறு உழைப்பதுஎன்பது குறித்து சிந்தித்தேன்’ எனவும் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த பயணம் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றிருந்தது.
இதனிடையே பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு நாட்டு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு பதவி நீக்கம் செய்தது. இந்த சம்பவம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களுக்கு கண்டனங்கள் குவிந்தது. தொடர்ந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்த இந்தியர்கள் பலரும் அந்த பயணத்தை ரத்து செய்தனர்.
View this post on Instagram
அங்கு இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட 10,500 ஹோட்டல் அறைகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாலத்தீவு சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் வலைத்தளப் பக்கத்திலும் #BoycottMaldives என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. மேலும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தொடங்கி, ரன்வீர் சிங், சல்மான் கான், அக்ஷய்குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தனது 45வது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுள்ள இந்தி நடிகை பிபாஷா பாசு அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இணையவாசிகள் இடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பான அவரது பதிவில், “மாலத்தீவின் ரிசார்ட்டுகளை விளம்பரப்படுத்துவதைநிறுத்துங்கள்! இந்திய நாகரிகமாக இருப்பதில் அதிக பொறுப்புடன் இருப்போம்!” என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: PM Modi: பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து.. சுற்றுலா பயணத்தை ரத்து செய்யும் இந்திய மக்கள்..!