Nayanthara Marriage : கோலாகலமாக நடந்து முடிந்த "கோலமாவு கோகிலா" திருமணம்...! மகிழ்ச்சி வெள்ளத்தில் நயன் - விக்கி ஜோடி!
Nayanthara - Vignesh Shivan Marriage : பிரபல நடிகை நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியாவின் பிரபல நடிகையும், லேடி சூப்பர்ஸ்டாருமாகியவர் நயன்தாரா. இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் திரைப்பட இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து வந்தார். இந்த நிலையில், இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஜூன் 9-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று அவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடை பெற்றது. மணமகன் விக்னேஷ்சிவன் – மணமகள் நயன்தாரா குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இவர்கள் மட்டுமின்றி பிரபல திரைப்பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி, நடிகை சுஹாசினி, நடிகர் ரெடின் கிங்ஸ்லி, தொகுப்பாளர் தேவதர்ஷினி உள்ளிட்ட நேரில் பங்கேற்றனர். திருமணம் நடைபெற்ற மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், திருமணத்தை முன்னிட்டு தனியார் பாதுகாப்பு பணி நிறுவன ஆட்களாகிய பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருமணத்தை முன்னிட்டு ட்விட்டரில் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்