மேலும் அறிய

காதலியான ஊழியர், கோடிகளை சுருட்டி உல்லாசம் - மகளின் திருமணத்திற்கு சிக்கல்? தொழிலதிபர் விபரீதம்

Affair Crime: காதலியின் மிரட்டல்களுக்கு அஞ்சி மகளின் திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சூரத்தில் அரங்கேறியுள்ளது.

Affair Crime: தொழிலதிபரை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது காதலி, பூனம் பதூரியா என்பவரை சூரத் போலீசார் கைது செய்துள்ளனர்.

மகளின் திருமணம் - தந்தை தற்கொலை

அலுவலகத்தில் ஒரு சாதாரண ஊழியராக சேர்ந்த பெண் நாளடைவில் காதலியாக மாறி, ரகசிய உறவை பயன்படுத்தி மிரட்டியதால் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரும் அறிந்திடாத அந்த உறவு தொடர்பான தகவல்கள் காற்றில் பரவ தொடங்கியுள்ள நிலையில், துப்பாக்கி தோட்டாவால் உயிரை மாய்த்து கொண்ட நபரின் மகளுக்கு, இன்னும் நான்கு நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில் ரகசிய உறவு, சர்ச்சைக்குரிய முறையில் பல கோடி மதிப்பிலான சொத்துகள் மரிமாற்றம், மகளின் திருமண கொண்டாட்டத்தின் போது உண்மை அம்பலப்பட்டு விடுமோ என்ற சூழலில் இந்த தற்கொலை நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊழியர் டூ லவ்வர்: 

கட்டுமானத்துறையை சேர்ந்த துஷார் கெலானியின் ஜாலி நிறுவனத்தில் கடந்த 2010ம் ஆண்டு ஊழியராக சேர்ந்த பூனம் பதூரியா இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2014 அல்லது 2015 வாக்கில் கெலானியுடன் மீண்டும் பழக தொடங்கியுள்ளார். பணி ரீதியாக தொடங்கிய பழக்கம் நாளடைவி தனிப்பட்ட உறவாக மாறியுள்ளது. வீட்டில் இதுகுறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. அதேநேரம், இருவருக்கும் இடையேயான உறவு நாளுக்கு நாள் மிகவும் வலுவடைந்துள்ளது.

கோடிகளில் புரண்ட பதூரியா

அதிகாரப்பூர்வமாக சில துறைகளில் இருவரும் பங்குதாரர்களாக செயல்பட்டுள்ளனர். 2017-18 வாக்கில் பச்பன் ப்ராண்ட் பெயரில் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த ஆரம்ப நிலை பள்ளிக்கு ப்ளூ பாபில்லன் என பெயர் சூட்டப்பட்டது. ஆவணங்கள் அடிப்படையில் அந்த பள்ளியில் 50 சதவிகித உரிமையாளராக பூனம் பதூரியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 6 முதல் 7 வருடங்களில் சுமார் ரூ.1.37 கோடி லாபமாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர் நிதி ரீதியாக எந்தவித முதலீடும் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு மட்டும் நிற்காமல் கடந்த ஆகஸ்ட் 2025ல் சுமார் 1.06 கோடி ரூபாய் மதிப்பிலான, இரண்டு வணிக வளாகங்கள் பதூரியா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பணம் துஷாரின் வங்கிக் கணக்கிற்கு வரவே இல்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. இந்த ஒட்டுமொத்த தகவல்களுமே துஷாரின் மறைவிற்கு பிறகே, அவரது குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.

மகளின் திருமணம் - தந்தை தற்கொலை ஏன்?

அடுத்த 4 நாட்களில் துஷாரின் மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தன. இந்த சுழுலில் தான் ஒரு வாரத்திற்கு முன்பாக தனது மகளிடம் பேசும்போது, “தான் ஒரு பெண்ணின் சதி வலையில் சிக்கிக் கொண்டதாகவும், திருமணத்தின் போது அவர் பிரச்னையை ஏற்படுத்துவார் என அஞ்சுவதாகவும்” மனமுடைந்து அழுதுள்ளார். அவரை தேற்றி மகள் அனுப்பியுள்ளார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஜனவரி 31ம் நாளன்று இரவு தனது அறையில், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை கொண்டு சுட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் 4ம் தேதி அவர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

காதலியை தூக்கிய போலீசார்

இதையடுத்து துஷாரின் மகள் கொடுத்த புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பூனம் பதூரியாவை கைது செய்தனர். இந்த நிதி சார்ந்த மோசடியில் அவருக்கு மட்டுமே தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாருடனும் சேர்ந்து திட்டமிட்டு இந்த சதி வேலையை நிகழ்த்தினாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Issue Hotels Closed: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
சென்னை மக்களுக்கு நிம்மதி.! பெருங்குடி, SRP டூல்ஸ் சந்திப்பில் ரூ.114 கோடியில் புதிய மேம்பாலம்- எப்போ வருது.?
சென்னை மக்களுக்கு நிம்மதி.! பெருங்குடி, SRP டூல்ஸ் சந்திப்பில் ரூ.114 கோடியில் புதிய மேம்பாலம்- எப்போ வருது.?
Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்
Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
Embed widget