மேலும் அறிய

MG Starlight 560: ஹைப்ரிட் காருக்கான புது அட்ரெஸ்.. EV ஃபார்மில் எம்ஜியின் 7 சீட்டர் - லோ காஸ்டில் 1,200KM பயணம்

MG Starlight 560 Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகப்படுத்த எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ள, நான்கு எஸ்யுவிக்களில் ஒன்றான ஸ்டார்லைட் 560 மாடலின் சாலை பரிசோதனை தொடங்கியுள்ளது.

MG Starlight 560 Hybrid SUV: எம்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்டார்லைட் 560 மாடல் எஸ்யுவி தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

உள்ளூரில் தயாராகும் எம்ஜி ஸ்டார்லைட் 560

இந்திய சந்தையில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ட்சர் கார் மாடலை அறிமுகப்படுத்தியது முதலே, முற்றிலும் புதிய மற்றும் முதல்முறையாக உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட எஸ்யுவியை பரிசோதிக்கும் பணிகளை எம்ஜி நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. ”MG520” என்ற கோட்நேமை கொண்ட எஸ்யுவி ஆனது ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் ஹெக்டர் கார் மாடலுக்கு மேலே நிலைநிறுத்தப்படுவதோடு, ப்ளக் - இன் ஹைப்ரிட் மற்றும் முற்றிலும் மின்சார எடிஷன்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாம். ப்ராண்டின் புதிய எஸ்யுவி ஆனது, சீனாவில் விற்பனை செய்யப்படும் வுலிங் ஸ்டார்லைட் 560 மாடலின் ரீபேட்ஜ் எடிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் சந்தைக்கான பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அடையாளப்படுத்துவதற்கு ஏதுவாக தற்காலிகமாக ஸ்டார்லைட் 560 என குறிப்பிடப்படுகிறது.

எம்ஜி ஸ்டார்லைட் 560: ப்ளக் - இன் ஹைப்ரிட்

இந்திய சாலைகளிலும் ஸ்டார்லைட் 560 மாடல் சோதனையை தொடங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, எஸ்யுவியின் வடிவமைப்பானது அது ப்ளக்-ஹைப்ரிட் வேரியண்ட் என்பதை உணர்த்துகிறது. தேன்கூம்பு போன்ற இன்செர்ட்களுடன் கூடிய பெரிய க்ரில் ஆனது, காரின் முன்பகுதியில் மேலே பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, இந்த மாடல் ஹைப்ரிட் எடிஷன் என்பதையும் உறுதி செய்கிறது. ரெக்டேங்குலர் வடிவிலான முகப்பு விளக்கானது, ஸ்டார்லைட் 560 மாடலில் இருப்பதை போன்றே அப்படியே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் இந்த காரானது 5 மற்றும் 7 சீட்டர் வடிவங்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், உள்ளூர் சந்தையிலும் எம்ஜி நிறுவனம் அப்படியே தொடரும் என கூறப்படுகிறது.

MG Starlight 560: ஹைப்ரிட் காருக்கான புது அட்ரெஸ்.. EV ஃபார்மில் எம்ஜியின் 7 சீட்டர் - லோ காஸ்டில் 1,200KM பயணம்

எம்ஜி ஸ்டார்லைட் 560 - ஹைப்ரிட் அம்சங்கள்

ஸ்டார்லைட் 560 ப்ளக்-இன் ஹைப்ரிட் வேரியண்டானது 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் நிலையான மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டாரின் கலவையை கொண்டுள்ளது. இரண்டு முன்புற சக்கரங்களுக்கே ஆற்றலை கடத்துகின்றன. இன்ஜின் ஆனது 105hp மற்ற்றும் 130Nm ஆற்றலையும், மின்சார மோட்டாரானது 194hp மற்ற்றும் 230Nm ஆற்றலையும் உற்பத்தி செய்கின்றன. மோட்டாருக்கான ஆற்றலானது 20.5KWh பேட்டரியை கொண்டு வழங்கப்படுகிறது. இதனால் முழுமையான மின்சார ஃபார்மில் 125 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த காரானது பயணிக்கும். மேலும் ப்ளக் -இன் ஹைப்ரிட் வேரியண்டானது அதிகபட்சமாக மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். ஒட்டுமொத்தமாக டேங்கை நிரப்பினால், இடைநிற்றல் இன்றி ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமாம்.

MG Starlight 560: ஹைப்ரிட் காருக்கான புது அட்ரெஸ்.. EV ஃபார்மில் எம்ஜியின் 7 சீட்டர் - லோ காஸ்டில் 1,200KM பயணம்

எம்ஜி ஸ்டார்லைட் 560 - மின்சார எடிஷன்

ஸ்டார்லைட் 560 மாடலின் முழுமையான மின்சார எடிஷனானது, வித்தியாசமான முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்ட மோட்டாரை கொண்டுள்ளது. 134hp மற்ற்றும் 200Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் வகையில் இந்த மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 56.7KWh பேட்டரி பேக் பயன்படுத்தப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என்றும் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கான ஸ்டார்லைட் 560 எடிஷனானது, பெரிய பேட்டரி மற்றும் அதிக செயல்திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

MG Starlight 560: ஹைப்ரிட் காருக்கான புது அட்ரெஸ்.. EV ஃபார்மில் எம்ஜியின் 7 சீட்டர் - லோ காஸ்டில் 1,200KM பயணம்

எம்ஜி ஸ்டார்லைட் 560 - உட்புற அம்சங்கள்

புதிய 7 சீட்டர் எஸ்யுவியில் முழுமையான எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் லேம்ப்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் மற்றும் வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், 360 டிகிரி கேமரா சிஸ்டம், லெவல் 2 ADAS போன்ற பல அம்சங்கள் அடுக்கப்படலாம். இது போக பல ப்ரீமியம் அம்சங்களும் இதில் வழங்கப்படலாம் என்றும், அடுத்தடுத்த நாட்களில் இதுதொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MG Starlight 560: ஹைப்ரிட் காருக்கான புது அட்ரெஸ்.. EV ஃபார்மில் எம்ஜியின் 7 சீட்டர் - லோ காஸ்டில் 1,200KM பயணம்

எம்ஜி ஸ்டார்லைட் 560 - விலை, போட்டியாளர்கள்

தொடர்ந்து, நடப்பாண்டின் இறுதியில் எம்ஜி ஸ்டார்லைட் 560 கார் மாடலானது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. இதன் முழுமையான மின்சார எடிஷனானது டாடா ஹாரியர் மின்சார எடிஷனுடன் போட்டியிட உள்ளது. ஹைப்ரிட் எடிஷனில் மஹிந்த்ரா XUV 7XO, டாடா ஹாரியர், ஹுண்டாய் அல்கசார் மற்றும் டாடா சஃபாரி ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது. இதன் விலையானது லட்சத்தில் தொடங்கி 35 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் போட்டித்தன்மை மிக்க வகையில் விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget