புதுமணத் தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருப்பதியில் சுவாமி தரிசனம்...!
புதுமணத் தம்பதிகளான இயக்குனர் விக்னேஷ்சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினர் இன்று திருப்பதிக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
![புதுமணத் தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருப்பதியில் சுவாமி தரிசனம்...! nayanthara vignesh shivan couples visit tirupati புதுமணத் தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருப்பதியில் சுவாமி தரிசனம்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/10/9692e945e773736a0d3574f25207f149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் நேற்று பிரபல நடிகை நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கல்யாண
— Maheswaricinraj (@MahiCraj) June 10, 2022
உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக @VigneshShivN @NayantharaU தம்பதியினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.#VigneshShivanNayanthara #wikki #Nayanthara pic.twitter.com/umGtntJ58e
இந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர்ஸ்டாருமானவர் நயன்தாரா. இவர் தன்னுடயை காதலர் விக்னேஷ்சிவனை நேற்று திருமணம் செய்தார். இவர்களது திருமணத்தை முன்னிட்டு ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துகளை சமூகவலைதளங்ளில் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். திருமணம் முடிந்த உடன் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருப்பதி செல்வார்கள் என்று தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில், சற்றுமுன் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருப்பதிக்கு சென்றனர். வால்வோ காரில் தம்பதி இருவரும் சென்னையில் இருந்து நேரடியாக திருப்பதி சென்றனர்.
நயன்தாராவிற்கும், விக்னேஷ்சிவனுக்கும் திருப்பதி மிகவும் மனதிற்கு நெருக்கமான ஆலயம் ஆகும். இவர்கள் இருவரும் கடந்த 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்து வந்தது முதல் அடிக்கடி திருப்பதி ஆலயத்திற்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, சமீபகாலங்களில் நயன்தாரா – விக்னேஷ்சிவன் ஜோடி அடிக்கடி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, திருமணம் முடிந்த பிறகு முதன்முறையாக இருவரும் புதுமணத்தம்பதிகளாக திருப்பதி வெங்காடசலபதி ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
நயன்தாரா மஞ்சள் நிற புடவையிலும், விக்னேஷ்சிவன் பட்டு வேஷ்டி, பட்டுசட்டையிலும் கோவிலுக்கு வந்தனர். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்து மதத்தை தழுவியதாக கூறப்படுகிறது. மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற விக்னேஷ்சிவன் – நயன்தாரா திருமணம்கூட இந்து மத முறைப்படியே நடைபெற்றுள்ளது. நயன்தாரா மஞ்சள்கயிறு சூடிய மாங்கல்யத்தை பார்க்கும் புகைப்படம் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
திருப்பதி ஏழுமலையான் கல்யாண
— Melwin (@melwins23) June 10, 2022
உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக
VigneshShiv, Nayanthara தம்பதியினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.#VigneshShivan #VigneshShivanNayanthara #NayantharaVigneshShivan pic.twitter.com/oAGT2jdxhF
மேலும், திருமணத்திற்கு முன்பாக திருச்சி அருகே உள்ள விக்னேஷ்சிவனின் குலதெய்வ ஆலயத்திற்கு நேரில் சென்ற விக்னேஷ்சிவன் - நயன்தாரா ஜோடி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தேனிலவுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், நயன்தாராவும்- விக்னேஷ்சிவனும் படப்பிடிப்பிலே கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ்சிவனும், நயன்தாராவும் காதலித்துக்கொண்டிருந்தபோது வெளிநாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)