Nayanthara: டெஸ்ட், அன்னபூரணி படங்களின் அசத்தல் லுக்.. நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசு தந்த படக்குழுவினர்!
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் டெஸ்ட் மற்றும் அன்னப்பூரணி படக்குழுக்கள் வாழ்த்தியுள்ளன.

லேடி சூப்பர்ஸ்டார்
லேடி சூப்பர்ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாரா இன்று தனது 39 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, நடிகர் , தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர், காஸ்மெடிக் பிராண்ட் உரிமையாளர் இப்படி பல அடையாளங்களை உருவாக்கி இருக்கிறார். ஜவான் மாதிரியான மிகப்பெரிய கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா மறுபக்கம் சோலோவாக பல திறமையான இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தற்போது அவர் நடித்து வரும் இரண்டு படங்களில் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டெஸ்ட்
காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவியத் தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, தமிழ் படம்-2 , கேம் ஓவர், ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம், கடசீல பிரியாணி, தலைக்கூத்தல் ஆகிய பல படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டெஸ்ட்.
இந்நிறுவனத்தின் உரிமையாளரான சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நடிகை நயன்தாரா ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடிக்கின்றனர். 3 பேரும் ஒன்றாக இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
அதேசமயம் ஆயுத எழுத்து மற்றும் ரங் தே பசந்தி என்ற இந்தி படத்திற்கு பிறகு மாதவன் மற்றும் சித்தார்த் இருவரும் நடிக்கும் 3வது படமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும் நடிகை ராஷி கண்ணா முக்கியமான கேரக்டர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியது. முன்னதாக டெஸ்ட் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்த நிலையில் தற்போது நயன்தாராவுக்கு மட்டுமான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Happy Birthday #Nayanthara ! ✨#HBDNayanthara #theTEST🏏@sash041075 @chakdyn@ActorMadhavan #Nayanthara #Siddharth@studiosynot @onlynikil pic.twitter.com/uhRJz1gePq
— Y Not Studios (@StudiosYNot) November 18, 2023
அன்னப்பூரணி
அதேபோல், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி படம் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நயன்தாராவின் 75-வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி படத்தை, ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அன்னப்பூரணி படத்தின் பாடல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.
இப்பாடல் நயன்தாரா ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
மேலும் படிக்க: Conjuring Kannappan : ரகளையான பேய் படம்தான்.. ஆனால் குழந்தைகள் பார்க்கலாமா? கான்ஜூரிங் கண்ணப்பன் சென்சார் என்ன சொல்லுது?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

