மேலும் அறிய

Conjuring Kannappan : ரகளையான பேய் படம்தான்.. ஆனால் குழந்தைகள் பார்க்கலாமா? கான்ஜூரிங் கண்ணப்பன் சென்சார் என்ன சொல்லுது?

சதீஷ் நடித்திருக்கும் காஞ்சூரிங் கண்ணப்பன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

நகைச்சுவை நடிகர் சதீஷ்

 சிவா நடித்த தமிழ் படம்  மற்றும்  ஏ.எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் சின்ன சின்ன  கதாபாத்திரத்தில் தோன்றிய சதீஷ் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபல நகைச்சுவை நடிகராக உருவான நடிகர் சதீஷ். டைமிங் காமெடிகளின் மூலம் தமிழ் சினிமாவில் நீண்ட நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து மான் கராத்தே , தாண்டவம், சிகரம் தொடு , நையாண்டி உள்ளிட்ட படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சதீஷ் கத்தி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.

பல்வேறு படங்களில் நடித்து வந்த சதீஷ், அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் நகைச்சுவை நடிகர்களுக்கு நடிகராக நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறதோ என்னவோ. கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார் சதீஷ்.

நாய் சேகர்

சதீஷ், குக்கு வித் கோமாளி புகழ் பவித்ரா இணைந்து  நடித்து வெளியான படம் நாய் சேகர். கிஷோர் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. நாய் சேகர் திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ் நடித்துள்ள படம்தான் கான்ஜூரிங் கண்ணப்பன்.

கான்ஜூரிங் கண்ணப்பன்

சதீஷ் கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதிய் இயக்கியிருக்கும் திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன் . ஏ.ஜி எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஹாரர் காமெடியாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன்  மற்றும் நாஸர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஒடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

யு/ஏ சான்றிதழ்

வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக இருக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் முதல் பாடலான நோபடி ஸ்லீப்ஸ் ஹியர் என்கிற பாடல் இன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு யு. ஏ சென்ஸார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஹாரர் படம் என்பதால் கொஞ்சம் முகம் சுளிக்கும்  வகையிலான காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம்.

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget