Watch Video : 'மீண்டும் சந்திக்கலாம்'.. சூரிய அஸ்தமனத்தை உருகி ரசித்த விக்கி-நயன் ஜோடி!
கைகளை கோர்த்துக் கொண்டு ரம்மியமான சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்த கோலிவுட் காதல் ஜோடி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கோலிவுட்டின் ட்ரெண்டிங் ஜோடி ஆவர். கல்யாணம் முடிந்த கையுடன் தாய்லாந்து சென்ற இவர்கள் ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டுக்கு சென்றனர். தங்களின் விடுமுறை நாட்களை
நன்கு கொண்டாடிய ஜோடி இப்பொது ரொமான்ஸ் நகரத்திற்கு டாட்டா பாய் பாய் சொல்லி விட்டு கிளம்பவுள்ளனர்
Vicky and Nayan pic.twitter.com/vKRBKom5QS
— dhanushya (@dhanushya02) August 29, 2022
இயக்குநர் விக்னேஷ் சிவன் பொதுவாக இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார். அடிக்கடி பல புகைப்படங்களை பதிவு செய்வார். அவரின் போட்டோவை விட அவரது மனைவி நயனின் போட்டோக்களை ஷேர் செய்வது வழக்கம்.சமீபமாக அவரின் இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு அழகான காட்சியை பதிவு செய்த்துள்ளார் விக்கி.
அதில் புது ஜோடி இருவரும், கைகளை கோர்த்துக் கொண்டு ரம்மியமான சூர்ய அஸ்தமனத்தை கண்டு ரசிகின்றனர். அந்த பதவில், விக்கி சொர்க்கம் என்று அந்த இடத்தை வர்ணித்துள்ளார். மீண்டும் சந்திக்கலாம் என்றும் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இதுபோல, ஸ்பெயின் நகரத்தில் நடந்த பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவையும் விக்கி பகிர்ந்தார். இடி மின்னலுக்கு இடையே, ஸ்பெயின் நகரத்தின் இசை மழை என்ற கேப்ஷனை பதிவு செய்தார்.
View this post on Instagram
அதற்கும் முன்பாக, ஸ்பெயின் நகரின் மாட்ரிட் பகுதியில் காதல் இணையர் இருவரும் கரங்களை பிடித்துக்கொண்டு வானத்தை பார்த்து படியே போஸ் கொடுத்தனர். வழக்கம் போல, இவர்களின் அனைத்து புகைப்படங்களும் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இவர்களைப் பார்த்து பல புதுமண ஜோடிகளும் நயன் - விக்கி போல் போஸ் கொடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க : ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஸ்பெஷல் ஸ்கிரீனிங்.. பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய அனுராக் காஷ்யப்..!
கோப்ரா படத்தை வெளியிட 1788 வெப்சைட்டுகளுக்கு தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!