கலக்கலான போஸ்ட்டரை வெளிட்ட "நானே வருவேன்" படக்குழுவினர்... ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்
Naane Varuven Poster released : செல்வராகவன் - தனுஷ் -யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
Naane Varuven latest poster released : மறுபடியும் ஒரு புது போஸ்டர் வெளியானது... "நானே வருவேன்" லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமா பல வெற்றி கூட்டணிகளை கண்டுள்ளது அந்த வகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் கூட்டணி மிகவும் வெற்றியான கூட்டணியாக இருந்தால் அந்த சந்தோஷத்தை அளவிடவே முடியாது. அப்படி பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கூட்டணி தான் செல்வராகவன் - தனுஷ் கூட்டணி. இப்படத்தின் இயக்குனராக மட்டுமின்றி நடிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி :
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த காம்பினேஷனில் உருவாகி வரும் படம் தான் "நானே வருவேன்". இவர்களுடன் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் இணையும் போது அது வேற லெவல் படமாக தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மூவரும் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்பது திரை ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
Team #NaaneVaruven to announce their release date soon. Here is the new poster pic.twitter.com/X9OL3KfYKJ
— Rajasekar (@sekartweets) August 31, 2022
லேட்டஸ்ட் அப்டேட் :
கலைப்புலி. எஸ். தாணு தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. தற்போது மிகவும் மும்மரமாக போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. படக்குழுவினர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அவ்வபோது "நானே வருவேன்" படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறி தற்போது மற்றுமொரு அப்டேட்டான தனுஷ் - இந்துஜா ரவிச்சந்திரனின் ரொமான்டிக்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அந்த போஸ்டர் தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Kollywood will witness the deadliest ever villan in all time @dhanushkraja
— மாரி ™ (@MaariBala_Offl) August 22, 2022
#NaaneVaruven 🤜🤛 pic.twitter.com/BbhTGefyhe
இந்த படத்திற்கு தவிர நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிவரும் "வாத்தி" திரைப்படத்திலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்திலும் நடிக்க உள்ளார்.