மேலும் அறிய

Devi Sri Prasad | ”வட மாநிலங்களில் அங்கீகாரம் இல்லை! - சூப்பர் ஸ்டாருக்கு இசையமைக்கணும்” - தேவி ஸ்ரீ பிரசாத் ஓபன் டாக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்ற வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் கனவாக உள்ளதாம்.

தமிழ் , தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் மன்மதன் அம்பு , புலி , சிங்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவர் இசையமைத்த புஷ்பா படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. சமீபத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் அளித்த நேர்காணல் ஒன்றில் இசையமைக்கும் விதம் குறித்தும் , புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய உ அண்டவா மாமா ஊ ஊ அண்டவா பாடல் குறித்தும்  பகிர்ந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஆரமித்த 20 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். இசை கலைஞர்கள் மேடையில் பாடும் பொழுது , ஆடியன்ஸை கவர வேண்டியது அவசியம் . அதனை அத்தனை அத்துப்படியாக செய்வார் ராக் ஸ்டார் டி.எஸ்.பி . பாடல்களை உருவாக்கும்பொழுது அதனை எப்போதுமே படத்தின் கதையின் போக்கிலேயே உருவாக்க வேண்டும் என நினைப்பாராம் தேவி ஸ்ரீ பிரசாத். கதையின் அடியில் இருந்துதான் பின்னணி இசையை கண்டுபிடிப்பேன் என கூறும் DSP , பாடல்களுக்கான வரைபடத்தை முதலில் உருவாக்குவாராம்.

View this post on Instagram
 
A post shared by Devi Sri Prasad (@thisisdsp)

பாடல்களை எப்போதும் 2 கோணங்களில் உருவாக்குவேன் என்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். முதலில்  பாடல்கள் படத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் . அதே நேரத்தில் பாடல்கள் தனித்துவமாக இருக்க வேண்டும். அப்போதுதானே ரசிகர்கள் பாடல்களை ரசிப்பார்கள் என்கிறார் தேவி. சமந்தா ஆடிய ஊ அண்டவா பாடலுக்கு கூடுதல் முயற்சிகள் எடுத்தாராம். முதலில்  ஜாகோ ஜாகோ பாடலுக்கும் , பின்னர் சாமி சாமி பாடலுக்கும் இசையமைத்துள்ளார். அந்த இரண்டு பாடல்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் , மூன்றாவதாக உருவாக இருக்கும் ஐட்டம் பாடலுக்கு அதிக பிரஷர் எடுக்க வேண்டாம் என்றாராம் நடிகர் அல்லு அர்ஜூன். ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் , ஐடம் பாடலாக இருந்தாலும் இதில் என்ன மாதிரியான புதுமைகளை செய்ய முடியும் என யோசித்து பிளான் செய்திருக்கிறார் . பாடலாசிரியர் சந்திரபோஸ் ஊ அண்டவா பாடலை கொடுத்ததும் அதனை வைத்து டியூன் செய்து இயக்குநருக்கு அனுப்பிய தேவி , இந்த பாடல் எப்படியான வரவேற்பை பெற போகிறது என்பதை மட்டும்  பாருங்கள் என மிகுந்த நம்பிக்கையுடன் கூறினாராம்.

View this post on Instagram
 
A post shared by Devi Sri Prasad (@thisisdsp)

டி.எஸ்.பி எப்போதுமே ரசிகர்களோடு ரசிகர்களாக தன்னை உணர்வதாகத்தால்தான் அவர்களை கவரும் வகையில் இசையை உருவாக்க முடிகிறது என்கிறார். என்னதான் தென்னிந்தியாவில் முக்கியமான  இசையமைப்பளர்களுள் ஒருவராக இருந்தாலும் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்ற வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் கனவாக உள்ளதாம். அந்த கனவு நினைவாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்கிறார் தேவி. என்னதான் தெற்கில் முக்கியமான இசையமைப்பாளராக இருந்தாலும், வட மாநிலங்களில்  இசையமைப்பாளர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்கிறார். பாலிவுட்டில் ஒரு படத்தின் ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர், யார் இசையமைக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. பலமுறை என் பாடல் ஹிட்டாகிவிடுமோ என்று சில சமயங்களில் வருத்தப்பட்டிருக்கிறாராம். காரணம்  பாடல் ஹிட்டானாலும் இசையமைப்பாளர் யார் என்றே தெரியாது என வருந்துகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

தலைப்பு செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " ஃபீல் மை லவ் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Embed widget