மேலும் அறிய

“ரகிட ரகிட” பாடல் எங்கே ஷூட் செய்யப்பட்டது தெரியுமா ? மனம்திறந்த சந்தோஷ் நாராயணன்!

பிரிட்டிஷ் பேண்ட் குழுவினர் மற்றும் இசை கலைஞர்கள், ஸ்காட்டிஷ் இசை கலைஞர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையாளர்களுடன் இணைந்து இப்படத்தில் இசை அமைத்துள்ளேன் சந்தோஷ் நாராயணன்!

இந்திய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களும், ‘ரகிட ரகிட’ மெட்டை இசைத்தவாறு Netflix உடைய “ஜகமே தந்திரம்” வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான “ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து” என்ற 3 பாடல்கள் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முழுமையான காரணம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் உழைப்பே. தமிழ் சினிமாவில் முன்னனி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன், ஒவ்வொரு முறையும் தனது வித்தியாசமான இசையமைப்பில் மூலம் மாயங்களை நிகழ்த்தி, ரசிகர்களின் மனதை பரவசப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அதிக அளவில் சுதந்திரமாகவும், இசையமைக்க உரிய நேரமும் கிடைத்ததால் ரசிகர்கள் அனைவரும் விரும்பும் வகையிலான இசையை அமைத்துள்ளதாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஜகமே தந்திரம் படத்திற்கு இசையமைத்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ள சந்தோஷ் நாராயணன் "இப்படத்தின் இசைப்பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் நேரம் கிடைத்தது. உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் நிறைய மெனக்கெட்டேன். பல இடங்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படம் ஒரு வகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே சொல்லலாம். அதிலும் பிரிட்டிஷ் பேண்ட் குழுவினர் மற்றும் இசை கலைஞர்கள், ஸ்காட்டிஷ் இசை கலைஞர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையாளர்களுடன் இணைந்து இப்படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். மதுரை நாட்டுப்புற இசையையும் இப்படத்தில் முயற்சித்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற படங்களில் படப்பிடிப்பு தளத்திற்கு எல்லாம் சென்றதில்லை ஆனால் “ஜகமே தந்திரம் படப்பிடிப்பிலும் தான் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதனால் படத்தில் இசை காட்சிகளில் எப்படி பொருந்தும், எது பொருந்தாது என்கிற தெளிவு இருந்தது. இந்த அனுபவமே புதுமையாக இருந்தது. ஒரு கலைஞனாக, பல விதமான புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி" என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஜகமே தந்திரம் படத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்த பாடல் “ரகிட ரகிட” பாடல் தான், ஆனால் இது ஸ்டூடியோ உள்ளே எடுக்கப்பட்ட பாடல் இல்லை என ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் சந்தோஷ் நாராயணன். அவர் தெரிவிக்கையில் "ரகிட ரகிட பாடல் முதல்முறையாக எனது ஸ்டூடியோவிற்கு வெளியே பதிவு செய்த பாடல். அந்த பாடலே ஒரு அனுபவத்தின் உணர்வின் வெளிப்பாடுதான். ரசிகர்கள் அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்று நினைத்தோம்" என தெரிவித்துள்ளார். மேலும் படத்தின்  மொத்த குழுவினர், குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. இப்படத்தில் அவருடன் இணைந்து நூற்றுக்கணக்கான புதிய முயற்சிகளை செய்தேன். ஆனால் “ஜகமே தந்திரம்” படத்திற்கு, காட்சிக்கு தேவையான மண்ணின் இசையை, படத்தில் கொண்டுவந்துள்ளோம். ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உடைய  மாயாஜால இசையை, வரும் ஜூன் 18-ஆம் தேதி Netflix தளத்தில் வெளியாகும் “ஜகமே தந்திரம்” படத்துடன் இணைந்து கொண்டாட ரசிகர்கள் பலர் ஆர்வமாக காத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget